இந்த உலகத்தை நடைவழியில் கடந்து வந்தவர்கள் தான் நாமெல்லாம். மீண்டும் கதை வழியில் அவற்றுள் பிரவேசிப்பது ஆழ்மனத்திற்கு ஒரு ஆனந்த அனுபவத்தைத் தருகின்றது.
இன்றைய நவீன குழந்தைகளுக்கு நம்மைக் காட்டிலும் சிந்திக்கும் திறன் கூடுதலாக இருக்கிறதை பார்க்க முடிகிறது. அந்தச் சிந்தனை ஆற்றலை உரிய நேரத்தில் நேர்வழிப்படுத்துவது நமது கடமை.
கதைகளின் வழியில் அவர்களின் கற்பனை உலகை இன்னும் மிளிர, துளிர்க்கச் செய்ய முடியும். பெரும்பாலும் தனித்து விடப்படும் குழந்தைகளுக்கு பின்நாட்களில் தன்னளவிலான நம்பிக்கையின்மையும், எதையும் எதிர்கொள்ளும் திறனும் வாய்க்காமல் போகலாம். கூடுமான வரையில் அவர்களை பொதுத் தளத்தில் அங்கீகரிப்பதும், அவர்களுக்கான நம்பிக்கையை விதைப்பதும் நமது ஆகப் பெரும் கடமை.
கதைகளின் வழி அவர்களின் வாழ்வை நகர்த்தும் பொழுது, இன்னும் கூடுதலாக சிந்திக்கத் தொடங்குகிறார்கள். எதிலும் அவர்களைக் கட்டுப்படுத்துவதைவிட, அவர்களிடம் நாம் விட்டுக்கொடுத்து புரிந்து கொள்ள வைப்பதுதான் சமகாலத்தில் நாம் செய்ய வேண்டிய குழந்தை வளர்ப்புப் பணி.
ஒவ்வொரு கதைகளையும் அவர்களின் கண்கொண்டு பார்த்து, குழந்தைகளாகவே மாறி, அவர்களின் பேச்சு மொழி, வெகுளித்தன்மை உள்ளிட்டவற்றை உயிர்ப்புடன் இந்தக் கதைகளில் வடித்திருக்கிறேன் என நம்புகிறேன்.
இதுவரை பேசாத, நடக்காத பறவைகளும், விலங்குகளும் இந்தக் கதைகளின் மூலம் தங்களின் நீண்டநாள் ஆசையை நிவர்த்தி செய்து கொள்கின்றன. மனதிற்கு இதமான என பால்ய நினைவுகளை மீண்டும் இங்கு தரிசித்திருக்கிறேன். அதே துள்ளல், குறும்பு, துடிப்பு என கதை முழுக்க நானும் உலாவுகிறேன்.
உமையவன்
இந்தக் கடத்தல் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகத் திகழ்பவன் எஸ்கொபார். கொலம்பியாவின் தலைநகரமான பொகாட்டோவில் கொடிகட்டிப் பறந்து, கோடி கோடியாகச் சம்பாதித்துக் கொண்டிருப்பவன் இவன். பயங்கர போதைக் குற்றங்களுக்காக இவனைத் தங்களிடம் அனுப்பும்படி அமெரிக்கா கேட்க, கொலம்பியா அரசாங்கமும் அதற்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
எஸ்கொபாரும் அவனுடைய போதைக் கும்பலும் கொலம்பியாவில் இருக்கும்வரை அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. சட்டம் எஸ்கொபாரை ஒன்றும் செய்யாது. ஆனால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டால் சாகும்வரை சிறைவாசம் தான். ஆகவே, அமெரிக்காவுக்குத் தன்னை நாடு கடத்தாதிருக்கும்படி கொலம்பியா அரசாங்கத்தைப் பணியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான் எஸ்கொபார். கூடவே ஒரு பயங்கர நடவடிக்கையும் மேற்கொள்கிறான். அது…
எஸ்கொபாரையும் அவன் கும்பலையும் நாடு கடத்த வேண்டும் என்று குரல் கொடுப்பவர்களைப் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்துக்கொண்டு சித்திரவதை செய்வது.
இந்தச் சூழ்நிலையின் பின்னணியில் ஆரம்பமாகிறது நோபல் பரிசு பெற்ற கேப்ரியல் மார்க்கிஸ் எழுதிய NEWS OF A KIDNAPPING-ஐ தழுவிய உண்மைத் தொடர்.
ரா.கி.ரங்கராஜன்
இளம் எழுத்தாளர் ப.ராமசாமி என்கிற உமையவன் சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ள கெம்பநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். கதை, கவிதை, கட்டுரை சிறுவர் இலக்கியம், ஹைக்கூ, ஆன்மிகம், உரைநூல்கள், பதிப்பு நூல்கள் என பதினைந்து நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். எழுதுவதோடு மட்டுமின்றி கவியரங்க நடுவர், பட்டிமன்ற பேச்சாளர், கருத்தரங்கம் என இலக்கிய நிகழ்வுகளிலும் தன் முத்திரையைப் படைத்து வரும் பன்முகப் படைப்பாளி.
தமிழக அரசின் 'தமிழ் செம்மல்' விருது, கம்போடியா அரசின் உலக பாரதியார் விருது உட்பட இரண்டு அரசு விருதுகளை பெற்றுள்ளார். ரவுண்ட் டேபிள் ஆப் இந்தியா நிறுவனம் வழங்கிய "பெருமைமிகு தமிழர் விருது" (Pride of Tamilnadu - 2018) உள்ளிட்ட இருபத்தைந்திற்கும் மேற்பட்ட விருதுகளையும், பல சிறந்த நூல்களுக்கான பரிசினையும் பெற்றுள்ளார்.
சாகித்ய அகாடெமியின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய இளம் எழுத்தாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டின் சார்பாக பங்குகொண்ட ஒரே இளம் எழுத்தாளர். கலைஞர், மக்கள், பொதிகை. Z தமிழ் போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் இவரது நேர்காணல் ஒளிபரப்பாகியுள்ளது. அகில இந்தியா வானொலி, இணைய காணொலி போன்றவற்றிலும் பங்கு கொண்டுள்ளார்.
கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் என பன்முக ஆற்றலாளர். இவரின் சிறுவர் நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கவிதைகள் கல்லூரி பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.