Run Lola Run

· Pustaka Digital Media
ই-বুক
157
পৃষ্ঠা
রেটিং ও রিভিউ যাচাই করা হয়নি  আরও জানুন

এই ই-বুকের বিষয়ে

இந்த நாவல் மனிதநேயம் பற்றிய கேள்விகளைப் பலவிதமான கோணங்களில் எழுப்புகின்றன. உண்மையென நாம் எதையெதையெல்லாம் அறிந்து வைத்திருக்கிறோம் என்கிற கேள்வியையும் எழுப்பிச் செல்கிறது. எல்லாப் பதில்களுக்குள்ளிருந்தும் ஒரு புதிய கேள்வியை உருவாக்கி எழுப்பிய வண்ணமிருக்கிறது. “மேன் கேன் பி டிஸ்டிராய்ட் பட் நெவர் பி டிஃபீட்டட்” என்று நோபல் பரிசு கலைஞன் ஹெமிங்வே சொன்னார். அதன் உதாரணம் தான் இந்த லோலா.

லோலா என்கிற கதாபாத்திரம் வெளிப்படுத்தும் சித்தாந்தத்தின் வழிநடத்தல் அதனைச் சாத்தியப்படுத்தி விட்டிருக்கிறது. அவள் இயற்கையோடு பொருதுகிறாள். இயற்கையை தன்வசப்படுத்தும் சாகசத்தின் சூட்சுமம் தேடுகிறாள். சளையாமல் தேடிக்கொண்டே இருக்கிறாள். கண்டடையும்வரை விடாமல் தொடர்ந்து தட்டிக்கொண்டேயிருக்கிறாள்.

லோலா அழகானவள். வசதியானவள். படித்தவள். பாரம்பரியமிக்க குடும்பப் பின்புலம் கொண்டவள். கௌரவமான உத்யோகத்தில் இருப்பவள். ஆனாலும் அபாரமான காதல் உணர்வு அவளை உந்தித் தள்ளுகிறது. சிக்கலுக்குள்ளாக்குகிறது. அவள் தொடர்ந்து அந்த விளையாட்டின் கணங்களை மாற்றியமைத்துத் தான் எதிர்பார்க்கிற நிகழ்வை நோக்கி ஓடுகிறாள். இலக்கில் எட்டாமல் மயிரிழையில் அவை நழுவும்போதும் நம்பிக்கையை விடாமல் ஓடுகிறாள்.

காதலின் உன்மத்தம் அவளை ஒற்றைப்புள்ளி நோக்கி இயக்கிய வண்ணமிருக்கிறது. அவள் மற்ற அத்தனை திசைகளையும் மறந்து விடுகிறாள் அல்லது தொலைத்து விடுகிறாள். ஆவேசமாகி ஓடுகிறாள்.

அவள் விதியோடு விளையாடுகிறாள். ஆக்ரோசமாய் அந்த விளையாட்டு துவங்கி நிறைவுறுகிறது அல்லது ஒரு புள்ளி வரை சொல்லிச் செல்கிறது. விதியோடு விளையாடிக் கொண்டிருப்பவள் ஒரு புள்ளியில் புதிய விதியை உண்டாக்கும் பாதை நோக்கி ஓடியபடி இருக்கிறாள். ஒரு புள்ளியில் ஓட்டத்தின் இயக்கமாகவே ஆகிப் போய்விடுகிறாள். ஒவ்வொரு முறை தோற்கும் போதும் அந்த அனுபவத்தின் சூட்சுமத்தைத் தனது இயக்கத்தோடு இணைத்துக் கொண்டு ஓடுகிறாள். போராட்டம் சுற்றிச்சுற்றி அவளை இருந்த இடத்திலேயே கொண்டு வந்து நிறுத்துகிறது. அவள் சளைக்கவில்லை. திரும்பத்திரும்ப ஒரே விளையாட்டைத் துவக்கும் கணங்களை மாற்றிமாற்றி விளையாடி தன் புள்ளியை கையகப்படுத்த யத்தனிக்கிறாள். அந்தச் சுழற்சியிலும், சுற்றலிலும் அவள் வட்டப்பாதையில் வந்த புள்ளியையே வந்தடைவதாய் இருந்தாலும் அந்தப் பயணிப்பில் சக்தியூட்டப்பட்டு சுருட்கம்பிப் பாதையாய் உயர்வு கொள்வதோடு இந்நாவலை வாசிப்பவர்கள் அனைவரின் மனதிலும் அச்சக்தியை நிறைத்த வண்ணமிருக்கிறாள்.

லோலா இயற்கையோடு சாதுர்யமாய் மோதுகிறாள். அதில் இயற்கையைத் தன்வசப்படுத்தும் சாகசத்தின் சூட்சுமம் தேடுகிறாள். சளையாமல் தேடிக்கொண்டே இருக்கிறாள். கண்டடையும் வரை விடாமல் தொடர்ந்து தட்டிக் கொண்டேயிருக்கிறாள். இந்த நாவல் டாம் டிக்வரின் “ரன் லோலா ரன்” திரைக்கதையினை அடியற்றி எழுதப்பட்டது.

லோலா வசீகரமானவள். வசதியானவள். பாரம்பரியம் மிக்கவள். கௌரவமான உத்யோகத்தில் இருப்பவள். ஆனாலும் அவளின் அபாரமான காதல் உணர்வு அவளைச் சற்றும் எதிர்பாராத திசையில் புதியவொரு விளையாட்டிற்குள் உந்தித் தள்ளுகிறது. சிக்கலுக்குள்ளாக்குகிறது. அவள் தொடர்ந்து அந்த விளையாட்டின் கணங்களை மாற்றியமைத்துத் தான் எதிர்பார்க்கிற நிகழ்வை நோக்கி ஓடுகிறாள். இலக்கு எட்டாமல் மயிரிழையில் நழுவும் போதெல்லாம் நம்பிக்கையை விடாமல் ஓடுகிறாள். காதலின் உன்மத்தம் அவளை அந்த ஒற்றைப் புள்ளி நோக்கி இயக்கிய வண்ணமிருக்கிறது. அவள் மற்ற அத்தனை திசைகளையும் மறந்து விடுகிறாள் அல்லது தொலைத்து விடுகிறாள்.

அவள் விதியோடு விளையாடுகிறாள். விதியோடு விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரு புள்ளியில் புதிய விதியை உண்டாக்கப் பார்க்கிறாள். அதன் சூட்சுமம் நோக்கி ஓடியபடி இருக்கிறாள். இங்கே ஓட்டம் ஒரு மனக்குவிப்பு கொண்ட தியானிப்பாகிறது. ஓடிக் கொண்டேயிருக்கிறவள், ஒரு புள்ளியில் ஓட்டத்தின் இயக்கமாகவே ஆகிப் போய்விடுகிறாள். ஒவ்வொரு முறை தோற்கும் போதும் அந்த அனுபவத்தின் சூட்சுமத்தைத் தனது இயக்கத்தோடு இணைத்துக் கொண்டு ஓடுகிறாள். போராட்டம் சுற்றிச்சுற்றி அவளை இருந்த இடத்திலேயே கொண்டு வந்து நிறுத்துகிறது. அந்தச் சுழற்சியிலும், சுற்றலிலும் அவள் அந்தச் சுருள் வட்டப்பாதையில் வந்த புள்ளிக்கே வந்தடைவதாய் இருந்தாலும் அந்தப் பயணிப்பில் சக்தியூட்டப்பட்டு சுருள்வில்லின் பாதை போல உயர்வு கொள்வதோடு இந்நாவலை வாசிப்பவர்கள் அனைவரின் மனதிலும் அதனை நிறைக்கக் கூடியவளாய் இருக்கிறாள்.

লেখক সম্পর্কে

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

ই-বুকে রেটিং দিন

আপনার মতামত জানান।

পঠন তথ্য

স্মার্টফোন এবং ট্যাবলেট
Android এবং iPad/iPhone এর জন্য Google Play বই অ্যাপ ইনস্টল করুন। এটি আপনার অ্যাকাউন্টের সাথে অটোমেটিক সিঙ্ক হয় ও আপনি অনলাইন বা অফলাইন যাই থাকুন না কেন আপনাকে পড়তে দেয়।
ল্যাপটপ ও কম্পিউটার
Google Play থেকে কেনা অডিওবুক আপনি কম্পিউটারের ওয়েব ব্রাউজারে শুনতে পারেন।
eReader এবং অন্যান্য ডিভাইস
Kobo eReaders-এর মতো e-ink ডিভাইসে পড়তে, আপনাকে একটি ফাইল ডাউনলোড ও আপনার ডিভাইসে ট্রান্সফার করতে হবে। ব্যবহারকারীর উদ্দেশ্যে তৈরি সহায়তা কেন্দ্রতে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করে যেসব eReader-এ ফাইল পড়া যাবে সেখানে ট্রান্সফার করুন।