Oorum Perum: தமிழ்நாட்டின் ஊரும் பேரும்

·
· Mukil E Publishing And Solutions Private Limited
2.8
4 reviews
Ebook
400
Pages
Ratings and reviews aren’t verified  Learn More

About this ebook

 முகவுரை

‘ஊரும் பேரும்’ என்னும் இந் நூல் வரலாற்றின்பாற்பட்டது. இவ்வரலாறு தமிழ் நாட்டின் ஊரையும் பேரையும் விளக்குங் கலங்கரை.‘ஊரும் பேரும்’ என்னுந் தலைப்பு விழுமியது. அஃது ஆழ்ந்தபொருண்மை யுடையது; சுரங்கம் போன்றது.‘முழுமுதற் பொருள் ஊரில்லாதது - பேரில்லாதது’ என்றுஆன்றோர் பலர் அருளிப் போந்தனர். ஊர் பேர் இல்லாத முழுமுதற்குவழிபாடு நிகழ்ந்து வருகிறதா? இல்லையா? அதற்கு வழிபாடு நிகழ்ந்தேவருகிறது, எப்படி? ஊர் பேராலேயே வழிபாடு நிகழ்ந்து வருகிறது. ‘ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயினும் திருநாமம் பாடி நாம்தெள்ளேணங் கொட்டாமோ’ என வரூஉந் திருவாசகம் ஈண்டுக்கருதற்பாலது. ஊரும் பேரும் இறைக்குந் தேவையாதலை ஓர்க. ஊர் பேர்மாண்பே மாண்பு!

நாம் வாழும் இவ் வுலகம், இற்றைக்குச் சுமார் இருநூறு கோடிஆண்டுக்கு முன்னர், பெரிய செஞ்ஞாயிற்றினின்றும் பிளவுண்டு வீழ்ந்த ஒரு சிறிய துண்டு, வீழ்ந்த துண்டு, முதல் ஒரு நூறு கோடி ஆண்டுவரை அனற்பிழம்பாய்க் கொதிப்புற்றுக் கிடந்தது. பின்னே அது படிப்படியே தணியத் தொடங்கியது. அனல் தணியத் தணிய  நிலவகைகள், உயிர் வகைகள் முதலியன தோன்றலாயின. நிலமும் உயிருந்தோன்றியவாறே பிண்டமாய்க் கிடந்திருப்பின், அவை என்றோ பட்டுப்போயிருக்கும். அவை படாமல் வாழ்வடைந்து வருதல் கண்கூடு, காரணம் என்னை? காரணம் பலபடக் கழறலாம். ஈண்டைக்கு ஒன்றைச் சிறப்பாகக்குறித்தல் நலம். அது, நிலமும் உயிரும், ‘ஊரும் பேரும்’ பெற்றமை என்க.ஊரும் பேரும் உலகை வாழவைக்கும் பெற்றிமையுடையன என்பதை உன்னுக.

இப் பரந்த அழகிய உலகை என்னுள்ளே தொடர்பு படுத்துங் கருவி ஒன்றுள்ளது. அஃது உள்ளம். உள்ளம் ஓர் அகக்கரணம். அது, புலன்கள் வழியே தன் கடனை ஆற்றுகிறது. ஊர் பேர் இல்வழி உள்ளம் என்செய்யும்? அஃது எதனுடன் தொடர்பு கொள்ளும்? எக் கடனை ஆற்றும்?ஊரும் பேரும் இல்லையேல் உள்ளம் உறங்கியே போகும். ஊரும் பேரும் உள்ள நிகழ்ச்சிக்கு இன்றியமையாதன.

வாழ்க்கைக்கு பல துறைகள் தேவை. அவற்றுள் ஆவி போன்றவை ஊரும் பேரும். ஊரும் பேரும் வாழ்க்கையை இயக்கி வளர்ப்பன என்று கூறல் மிகையாகாது. ஊர் பேரால் உலகம் இயங்கல் வெள்ளிடைமலை. ஊர் பேரே உலகம்; வாழ்க்கை; எல்லாம் எல்லாம்.

இன்னோரன்ன சிறப்புக்கள் பல வாய்ந்த ‘ஊரும் பேரும்’  இந்நூலுக்குத் தலைப்பாய் அமைந்தது. நூலின் பொருண்மையை விளக்கத் தலைப்பொன்றே சாலும், நூலுக்கேற்ற தலைப்பு; தலைப்புக்கேற்ற நூல்.

சில நாடுகளின் ஊரும் பேரும் அடங்கிய ஆராய்ச்சி நூல்கள் வெளி வந்து உலவுகின்றன. அத் தகைய உலாவைத் தமிழ் நாட்டிற் காண்டல் அருமையாயிருந்தது. அவ்வருமையைப் போக்கும் வாய்ப்பு அறிஞர் சேதுப்பிள்ளை அவர்கட்குக் கிடைத்தது, தமிழ் நாட்டின் தவப் பயனாகும். தமிழ் கொழிக்கும்

பொருநைக்கரையில்பிறந்து, தமிழ் பொங்கும் பொதிகைத் தென்றலில் வளர்ந்து, தமிழார்ந்த மனமொழிமெய்களைப் பெற்றுத் தமிழ் வண்ணமாய்த் தமிழ் மொழியும் ஒரு பெருங்கொண்டலிடை உதித்த மின்னொளி இந் நூல், இதைத் தமிழ் நாட்டின் தவப்பயன் என்று சாற்றலாமன்றோ?

ஆசிரியர், நிலம்-மலை-காடு-வயல்-ஆறு-கடல்-நாடு-நகரம்-குடி-டை-கோ-தேவு-தலம் முதலியவற்றை அடியாகக்கொண்டு இந் நூற்கண் நிகழ்த்தியுள்ள ஊர் பேர் ஆராய்ச்சியும், ஆங்காங்கே பொறித்துள்ள குறிப்புக்களும், பிறவும் தமிழ்ச் சரித்திர உலகுக்குப் பெருவிருந்தாகும் என்பதில் ஐயமில்லை. தமிழ் நாட்டில் சில ஊர்ப்பேர்கள் சிதைந்தும் திரிந்தும் மருவியும் மாறியும் தத்தம் முதனிலையை இழந்துள்ளன. அவை மீண்டும் பழைய நிலை எய்திப் பண்புறுதற்கு இந் நூல் பெருந்துணை செய்தல் ஒருதலை. இந் நூலுள் பொலி தரும் சில ஊர்ப்பேர்களின் வரலாறு, சாம்பியும் சோம்பியும் நலிந்தும் மெலிந்துங்கிடக்கும் நம் மக்கட்கு அமிழ்தாகிப் புத்துயிர் வழங்கல் உறுதி. நூலின் நடைக்கண் நடம்புரியும் பீடும் மிடுக்கும் வீறும் நாட்டின் கவலையை நீக்கி, அதன்மாட்டுவேட்கையை எழுப்பி, அதை ஊக்குவனவாம்.

‘ஊரும் பேரும்’ என்னும் இந் நூல் காலத்துக்கேற்றது என்று சுருங்கச்சொல்லலாம். இவ் விழுமிய நூலைச் செவ்விய முறையில் யாத்து உதவிய ஆசிரியர்க்கு என் வாழ்த்தும் நன்றியும் உரியனவாக. அவர்க்குத் தமிழ்நாடுகடமைப்படுவதாக. இத்தகைய நூல் பல, ஆசிரியர்பால் முகிழ்த்தல்வேண்டுமென்று தமிழ்த் தெய்வத்தை வழுத்துகிறேன். தமிழ் வாழ்க; தமிழ்வெல்க!

சென்னை, 

16-7-1946.

திரு. வி. க.

Ratings and reviews

2.8
4 reviews
A Google user
August 26, 2018
Sumarana book
Did you find this helpful?

About the author

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.