அத்துடன் பௌத்த சமயம், ஆசிவகம், சாங்கியம், வைசேடிகம், வைதிக சமயம், லோபாயணம் என்னும் ஆறு மதங்களையும் விரிவாக கூறி அந்த சமயங்களில் தலைவர்களுக்கும் நீலகேசிக்கும் நடக்கும் சமய வாதங்கள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த நூலில் ஆறு சமயங்களில் பௌத்த சமயத்திற்கு மட்டும் நான்கு சருக்கங்களும், மற்ற ஐந்து சமயங்களுக்கும் ஐந்து சருக்கங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
சங்க காலத்தில் காணப்பட்ட தெய்வங்களே தமிழ் சமயங்களாகும். மற்றவை வெளியிலிருந்து வந்த சமயங்களாகும். சமண, பௌத்த மதங்களுக்கு முன்பே தமிழகத்தில் சைவமும், வைணவமும் இருந்திருக் கின்றது. அவற்றை எதிர்த்தே பிற சமயங்கள் வந்துள்ளது.
இவைகளைப் பற்றிய பல்வேறு கருத்துக்களும் சமண சமயத்தைப் பற்றிய விரிவான கொள்கை விளக்கங்களும் நீலகேசி என்னும் இந்த நூலில் விரிவாக பாடப்பட்டுள்ளது.
நீலகேசி காப்பியத்தில் மிகச் சிறந்த வர்ணனை களும் சமண சமயத்தின் கொள்கைகளும் விரிவாக பேசப்பட்டுள்ளது. இந்த நூலை தமிழ் சமுதாயம் படித்து இதன் சுவையை உணர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.