Ushaar Ulavaali

· Pustaka Digital Media
电子书
221
评分和评价未经验证  了解详情

关于此电子书

‘பகையாளியை உறவாடிக் கெடு’ என்று ஒரு முதுமொழி உண்டு. இன்றைக்குப் ‘பங்காளியைக் கூட உறவாடிக் கெடு’ என்று புதுமொழி உண்டாக்கும் அளவுக்கு உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது உளவு! நாடுகளுக்கு இடையே என்றில்லை... பெரும் நிறுவனங்களுக்கு இடையேயும் பெரிய பிரச்னையாக உருவெடுத்து நிற்கிறது உளவு! ‘அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு நாட்டின் மூவரில் ஒருவர் வேறு ஒரு நாட்டின் அல்லது வேறு நாட்டு நிறுவனத்தின் உளவாளியாக இருப்பார்’ என்று சர்வதேச அறிக்கை ஒன்று அலறுகிறது. அப்படி உளவாளியாக இருப்பது அவருக்கே தெரியாது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் தலை சீவப்பட்டார், நம் ஆந்திராவைச் சேர்ந்த இன்ஜினீயர் சூர்ய நாராயணா. அவர் செய்த குற்றம் என்ன...’ அமெரிக்காவுக்காக எங்களை உளவு பார்த்தார்’ என்று சொல்கிறார்கள், தலிபான் தீவிரவாதிகள். சூர்யநாராயணா உளவு பார்த்தார் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆனால் உலகெங்கும் அப்பாவிகள் பலர் அவர்களுக்கே தெரியாமல் இப்படி உளவு வேலைகளில் இறக்கி விடப்பட்டுள்ளனர் என்பது மட்டும் உண்மை! ஒரு நாட்டை அபகரிக்க அல்லது ஆக்கிரமிக்க யுத்தம் ஒன்றே வழி என்பது பழைய கோட்பாடாகி விட்டது. கடந்த கால சரித்திரங்களில் வேண்டுமானால் யுத்தத்தின் பங்கு இன்றியமையாததாக இருக்கலாம். எதிர்கால சரித்திரத்தில் யுத்தத்தின் பங்களிப்புக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். இதை வைத்து, உலகின் வலிமை மிக்க நாடுகள் எல்லாம் சைவமாகி விட்டன என்று அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது. முந்தைய காலங்களைப் போல நோஞ்சான் நாடுகளைப் பிடிக்கும் ஆசை இல்லா விட்டாலும், அவற்றை அடிமைகளாக ஆட்டிப் படைக்கும் பேராசை எல்லா வலிய நாடுகளிடமும் இன்றைக்கும் இருக்கவே செய்கிறது. அந்த வகையில் அவை ருத்ராட்சப் பூனைகளாகத்தான் நாக்கைத் தொங்க விட்டுக் காத்திருக்கின்றன. ஆனால், தங்கள் ஆசையை அவை பூர்த்தி செய்து கொள்ள யத்தத்தை நம்பவில்லை. யுத்தத்துக்கு நிகரான, ஆனால் பேரழிவை உண்டாக்காத, மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன. அந்த மாற்றுப் பாதைதான் உளவு! இனி உளவுதான் உலகம். ஒற்றர்கள்தான் அதன் உண்மையான தலைவர்கள். தன் எதிரியின் ரகசியங்களைத் தெரிந்துகொண்டு அவனை முன்கூட்டியே செயலிழக்கச் செய்கிற அரசும், நிறுவனங்களும் தான் இனி உலகை சர்வாதிகாரம் செய்யப் போகின்றன. ஒரு நாட்டை எதிரி யிடமிருந்து காக்க மட்டுமே முன்பு உளவு பயன்பட்டது. அந்த உளவாளிகள் வெளிச்சத்துக்கு வராத தேசத் தியாகிகளாகக் கருதப்பட்டார்கள். ஆனால், இனி காட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கிற எல்லாருக்குமே உளவு என்பது ஓர் அற்புதத் தொழில். முன்பு உளவு என்பது ஒரு அரசாங்கத்தின் சார்பான ரகசிய வேலை. இப்போது அதுவும் தனியார் மயமாக்கப்பட்டுவிட்ட து! உங்கள் அலுவலகத்தில்... உங்கள் பயணத்தில்... இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே ஓர் உளவாளி நிச்சயமாக இருக்கக்கூடும், உஷார்! சுதாங்கன்

作者简介

Sudhangan started his career in the year 1978 in a Tamil weekly "Thisaigal" (Directions). He also did freelancing in the popular Tamil Weekly "Kumudham".

After that he joined very popular Ananda Vikatan group in 1982. He was the first reporter for "Junior Vikatan" which was launched in January 1983! He became the most popular investigative journalist for Junior Vikatan and he became Chief Editor of Junior Vikaran.

In 1992 October, he joined as an editor for the Tamil Daily "Dinamani" of the Indian Express Group. Later he became the founder editor for the Tamil weekly "Tamizhan Express" launched by The Indian Express with Vivek Goenka as Managing Director and Sudhangan as Executive Editor.

He played a role as a Psephologist and Political Analyst for Vijay TV Channel in 1996 elections. He became the CEO (Current Affairs) of film director K.Balachandar's Minbimbangal. He did election shows for minbimbangal, covering parliamentary elections in 1998 & 1999.

Sudhangan joined Jaya TV in 2001 and played the role of Political Analyst until 2005. After 2005, he became a columnist for many newspapers and weeklies. He continued with election shows in Zee Tamil Channel. In Jaya TV, he is doing 6 political shows per week, director of "Thenkinnam" (a compilation of old Tamil Movie Songs). As a stage artist, he performed more than 500 shows from 1982. He also acted in 3 TV serials and 9 feature films directed by K. Balachandar, Bharathiraja and Agathiyan.

On literary side, he translated more than 15 books from English to Tamil which includes Former DGP V.R.Lakshminarayanan's Auto Biography - Appointment & Disappointments, Fredryick Forsyth, James Hadley Chase and Osho.

At present, he is columnist for Tamil daily "Dinamalar" Nellai Edition. He is also an independent writer and columnist.

He is the only South Indian Journalist to win "The Statesman" award for rural reporting in Calcutta.

为此电子书评分

欢迎向我们提供反馈意见。

如何阅读

智能手机和平板电脑
只要安装 AndroidiPad/iPhone 版的 Google Play 图书应用,不仅应用内容会自动与您的账号同步,还能让您随时随地在线或离线阅览图书。
笔记本电脑和台式机
您可以使用计算机的网络浏览器聆听您在 Google Play 购买的有声读物。
电子阅读器和其他设备
如果要在 Kobo 电子阅读器等电子墨水屏设备上阅读,您需要下载一个文件,并将其传输到相应设备上。若要将文件传输到受支持的电子阅读器上,请按帮助中心内的详细说明操作。