இந்த 'உடைக்கும் உளிகள்" எனும் நூலை எழுத நான் பரிபூரணன் அல்ல. இருந்தாலும் எனக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் ஓர் பூரணசிற்பி. சுரேஷ் எனும் கூடாரத்திற்குள் அவர் ஆவிக்குரிய உளிகளோடு உட்பிரவேசிக்கையில் என்னால் எப்படி தடுத்து ஆட்கொள்ளமுடியும்.
தேவன் உடைப்பது எதுவும் சிதைப்பதற்கு அல்ல. உருவாக்குவதற்கே. நம்மேல் பல கசப்பான துயர அனுபவங்கள் பயணம் செய்திருக்கலாம் அல்லது பல சாதகமற்ற சூழல் நம்மை சூழ்ந்து கடந்து சென்றிருக்கலாம். அல்லது பல மனிதர்களால் ஏமாற்றப்பட்ட நிலையில் மிதியுண்டு பிழைத்திருக்கலாம். எது எப்படியோ ஒன்றுமட்டும் நிச்சயம் இந்த உலகத்தில் சாதகமற்ற சூழல்களை சாதகமாய் மாற்றியவரும், ஏமாற்றின மனிதர்களே மீண்டும் வருந்தச் செய்கிறவரும், கசப்பான அனுபவங்களை மதுரமாய் மாற்றுபவருமான இறை சிற்பியின் கரத்தில் உயிர்கற்களான நம்மை செதுக்க ஒப்புகொடுக்கையில் நாம் உயிர்கற்களை ஓர் பயனுள்ள பாத்திரமாய் இப்புவியில் நடமாட முடியும். செதுக்க இனிவரும் பக்கங்களில் உளிகள் ஆயத்தம் தொடர்ந்து சந்திப்போம்.
கவிமுகில் சுரேஷ் என்கிற பெயரில் தர்மபுரியில் இருந்து வருகிறேன். எம்.ஏ.(சமூகவியல்) மற்றும் B.L.Isc(நூலகவியல்) படித்து பட்டம் பெற்றேன். இருபத்தி இரண்டு வருடங்களாக சமூக நிறுவனங்களில் மேலாளராக பணியாற்றி வந்திருக்கிறேன். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு சமூக தொண்டாற்றி உள்ளேன்.
கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவது என ஆரம்பித்து பல புத்தகங்களை வெளியிட்டு வருகிறேன். இது வரை வெளியான புத்தகங்கள்:
1.மண்மீதில் விண்மீன்கள் (கட்டுரை)
2.மறக்கமுடியாத முகவரிகள் (கவிதை)
3.ஜீவநதியின் ஓடங்கள் (கவிதை)
4.உடைக்கும் உளிகள் (கவிதை)
5.கண்ணான கண்ணே (நாவல்) தேவியின் கண்மணியில் என்னுடைய முதல் நாவல்
இது தவிர சங்கவி பதிப்பகத்தின் மூலம் என்னுடைய "மறக்க முடியாத முகவரிகள்" கவித் தொகுப்பு வெளியானது
தற்பொழுது "கண்ணாடி மீன்கள்" எனும் சிறுகதைத் தொகுப்பு பரிதி பதிப்பகத்தின் மூலம் வெளியாகியிருக்கிறது.
இதுவரை கண்ணதாசன் விருது, சமூகப் பணிக்காக அப்துல்கலாம் விருது,கவிமுகில் விருது, கவித்திலகம் விருது,கவிமுரசு விருது, தர்ஷினியின் சிறுகதை செம்மல் விருது, காந்தி விருது, பாரதி விருது, திருவள்ளுவர் விருது,Icon தகடூர் விருது, என 50க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றிருக்கிறேன்.
தொடர்ந்து வார இலக்கிய இதழ்களில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வருகிறேன். இப்பொழுது தொடர்ந்து எழுத்துப்பணியில் இயங்கி வருகிறேன் நான் எழுதுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் தருவது என் அருமை மனைவி சலோமி சங்கீதா. எனக்கு இரு பிள்ளைகள் ஜாஸ்மின், ஜோஷ்வா. தர்மபுரி சி.சுரேஷ் எனும் பெயரிலும், கவிமுகில் சுரேஷ் என்னும் பெயரிலும் படைப்புகளை படைத்து வருகிறேன்.