Time Management (Tamil)

· Manjul Publishing
৪.৬
১৩টি রিভিউ
ই-বুক
124
পৃষ্ঠা
রেটিং ও রিভিউ যাচাই করা হয়নি  আরও জানুন

এই ই-বুকের বিষয়ে

‘பிரையன் டிரேசி வெற்றி நூலகம்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஏழு புத்தகங்கள் மேலாளர்களுக்கும் தொழில்முறையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் பெரிதும் உதவக்கூடிய சக்திவாய்ந்த கையேடுகள் என்றால் அது மிகையல்ல. வியாபாரம் தொடர்பான முக்கியமான அம்சங்கள் குறித்த நம்பகமான உள்நோக்குகளை விரைவாகவும் சுலபமாகவும் பெற விரும்புகின்ற எவரொருவரும் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை. கைக்கு அடக்கமான இந்நூல்கள், அடிப்படை வியாபாரத் திறமைகளைக் கற்றுக் கொள்ளவும் அவற்றை மெருகேற்றவும் உதவக்கூடிய உண்மையான எடுத்துக்காட்டுகளும் நடைமுறை உத்திகளும் நிரம்பப் பெற்றுள்ளன.

அந்த வரிசையில் இடம்பெற்றுள்ள ‘நேர நிர்வாகம்’ எனும் இந்தச் சுருக்கமான வழிகாட்டி நூல், நீங்கள் தினமும் கூடுதலாக இரண்டு மணிநேரத்தைப் பெறுவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய 21 உத்திகளை உள்ளடக்கியுள்ளது. பிரையன் டிரேசி உட்பட, வெற்றியாளர்கள் பலரும் இன்றளவும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற உத்திகள் இவை.

 இந்நூலிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ளக்கூடிய சில விஷயங்கள் பின்வருமாறு:

 ·         முடிவற்ற இடையூறுகள், சந்திப்புக்கூட்டங்கள், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றைக் கையாளுவது எப்படி

·         முன்னுரிமைப் பட்டியலில் மேல்மட்டத்தில் இருக்கின்ற விஷயங்களுக்குப் போதிய நேரம் ஒதுக்குவது எப்படி

·         ஒரே மாதிரியான விஷயங்களை ஒன்றுதிரட்டி வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் அவற்றைச் செய்து முடிப்பது எப்படி

·         காலம் தாழ்த்தும் பழக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி

·         எந்த வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்மானிப்பது எப்படி

·         உங்கள் இலக்குகளை அடைவதற்கு எதிர்காலத்திலிருந்து பின்னோக்கிச் செயல்படுவது எப்படி

রেটিং ও পর্যালোচনাগুলি

৪.৬
১৩টি রিভিউ

লেখক সম্পর্কে

உலகில் இன்று தலைசிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர்களில் ஒருவராகத் திகழுபவர் பிரையன் டிரேசி. 75 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் அதிகமான பெருநிறுவனங்களுக்கும் 10,000க்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் தலைமைத்துவம், மேலாண்மை, விற்பனை, வியாபார மாதிரி மறுசீரமைப்பு, லாப மேம்பாடு ஆகிய விஷயங்களில் பல கருத்தரங்குகளை அவர் வடிவமைத்து வழங்கியுள்ளார்.  உலகம் நெடுகிலும் 5,000க்கும் அதிகமான சொற்பொழிவுகளை அவர் ஆற்றியுள்ளார். இதை 50,00,000க்கும் அதிகமானோர் கேட்டுள்ளனர். அவர் தற்போது ஒவ்வோர் ஆண்டும் 2,50,000 மக்களிடையே உரையாற்றி வருகிறார். அவர் உருவாக்கியுள்ள சுவாரசியமான, காணொளி சார்ந்த பயிற்சி வகுப்புகள் 38 நாடுகளில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. பிரையன் டிரேசி ஒரு வெற்றிகரமான நூலாசிரியர். அவர் 80க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். அவை 42க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன. 

ই-বুকে রেটিং দিন

আপনার মতামত জানান।

পঠন তথ্য

স্মার্টফোন এবং ট্যাবলেট
Android এবং iPad/iPhone এর জন্য Google Play বই অ্যাপ ইনস্টল করুন। এটি আপনার অ্যাকাউন্টের সাথে অটোমেটিক সিঙ্ক হয় ও আপনি অনলাইন বা অফলাইন যাই থাকুন না কেন আপনাকে পড়তে দেয়।
ল্যাপটপ ও কম্পিউটার
Google Play থেকে কেনা অডিওবুক আপনি কম্পিউটারের ওয়েব ব্রাউজারে শুনতে পারেন।
eReader এবং অন্যান্য ডিভাইস
Kobo eReaders-এর মতো e-ink ডিভাইসে পড়তে, আপনাকে একটি ফাইল ডাউনলোড ও আপনার ডিভাইসে ট্রান্সফার করতে হবে। ব্যবহারকারীর উদ্দেশ্যে তৈরি সহায়তা কেন্দ্রতে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করে যেসব eReader-এ ফাইল পড়া যাবে সেখানে ট্রান্সফার করুন।