முருகன் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட முதல் படை வீடு திருப்பரங்குன்றமாகும். சூரனையும் அவன் சகோதரர்களையும் அரக்கர் படைகளையும் முருகன் வெற்றி பெற்ற இடமான திருச்செந்தூர் இரண்டாவது படை வீடாகும்.
தன் தந்தையுடன் முருகன் கருத்து வேறுபாடு கொண்டு வந்து அமர்ந்த ஆவினன்குடி என்னும் பழனி மூன்றாவது படை வீடாகும்.
தன் தந்தை சிவனாருக்கு பிரணவப் பொருளை முருகன் விளக்கிய இடம் திருவேரகம் எனப்படும் சுவாமி மலையாகும். இது நான்காவது படை வீடு.
குரவர் குல மகளான வள்ளியை முருகன் திருமணம் செய்து கொண்ட இடம் குன்றுதோறாடல் எனப்படும் திருத்தணிகை மலையாகும். இது ஐந்தாவது படை வீடு.
பழமுதிர்ச்சோலை ஆறாவது படை வீடாகும். இவற்றின் சிறப்புக்களை விளக்கிப் பாடிய இந்த நூலை அனைவரும் கற்றுப் பயன் அடையும்படி கேட்டுக்கொள்கிறேன்.