ஜோ ஹார்ட் ஒரு வழக்கறிஞராகத் தன்னுடைய தொழில்வாழ்க்கையைத் தொடங்கினார். டேல் கார்னகி பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பிறகு, அவர் தன்னுடைய தொழில்வாழ்க்கையின் திசையையும் தன்னுடைய வருங்காலத்தையும் மறுபரிசீலனை செய்தார். இறுதியில், அவர் தன் சட்டத் தொழிலைத் துறந்துவிட்டு, ஒரு முன்னணி வீடுமனை வாங்கல்/விற்றல் நிறுவனத்தில் வேலைக்குச் சென்றார். பிறகு, ’இன்ஃபோஆலை’ என்ற ஒரு மின்-கற்றல் நிறுவனத்தை அவர் தொடங்கினார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அதை விற்றுவிட்டு, ‘அஸெட் ஹெல்த்’ என்ற அமெரிக்க நிறுவனத்தின் தலைவராக ஆனார். இறுதியாக, 2015-ல், அவர் டேல் கார்னகி நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஆனார். 2019-ல், ‘சிஇஓ ஃபோரம் குரூப்’, பரிபூரண மாற்றம் ஏற்படுத்திய பன்னிரண்டு தலைவர்களில் ஒருவராக ஜோவைத் தேர்ந்தெடுத்து, ‘டிரான்ஸ்ஃபர்மேட்டிவ் சிஇஓ லீடர்ஷிப்’ விருதை அவருக்கு வழங்கியது. உலக அளவில் முன்னணியில் இருக்கின்ற ‘டேக் கமான்ட்: எ டேல் கார்னகி பாட்காஸ்ட்’ என்ற ஒரு வலையொலிப்பதிவு நிகழ்ச்சியையும் ஜோ நடத்தி வருகிறார். தலைமைத்துவம், மீள்திறன், புதுமைப் புனைவு போன்ற பல்வேறு தலைப்புகளில் உலகம் நெடுகிலும் அவர் பேசி வருகிறார்.
மைக்கேல் குரோம், டேல் கார்னகி பயிற்றுவிப்பு மையத்தில் முப்பத்தைந்து ஆண்டுகாலம் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றார். மிகச் சமீபத்தில், அவர் அந்நிறுவனத்தின் தலைமைக் கற்றல் அதிகாரியாகவும் அதன் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். அவர் டேல் கார்னகி இயக்குநர் குழுமத்தில் தொடர்ந்து பங்களித்து வருகிறார். அவர் தன்னுடைய சமூகத்திலும் தன்னுடைய தேவாலயத்திலும் துடிப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஃபைனான்சியல் பீஸ் பல்கலைக்கழகத்தில் அவர் பகுதிநேரமாகப் பணியாற்றுகிறார். உள்ளூர் ‘சிறுவர் மற்றும் சிறுமியர் சங்கத்தில்’ அவர் ஓர் ஆசிரியராக இருக்கிறார். ‘பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்’ என்ற நூலுக்கு முன், ‘த சேல்ஸ் அட்வான்டேஜ் அன்ட் த லீடர் இன் யூ: ஹௌ டு வின் ஃபிரென்ட்ஸ், இன்ஃபுளூயென்ஸ் பீப்பிள், அன்ட் சக்சீட் இன் எ சேஞ்சிங் வேர்ல்டு’ என்ற நூலின் இணையாசிரியராக அவர் பங்களித்தார். மைக்கேலுக்கும் அவருடைய மனைவி நான்சிக்கும், நிக்கோல், அலெக்ஸ் ஆகிய அற்புதமான இரண்டு வளர்ந்த குழந்தைகள் இருக்கின்றனர்.