உபநிஷதங்களும் ஸ்ரீமத் பகவத்கீதையும்தான் உண்மையான சாஸ்திரங்கள். உபநிஷதங்களுக்கு விளக்கவுரையாக கீதை விளங்குகிறது. வேதாந்தத்திற்கு மிகவும் சிறந்த பிரமாண நூல் பகவத் கீதை. வேதங்களுக்கு அதிகாரபூர்வமான ஒரே விளக்கத்தை, வேதத்தை ஊக்குவித்தவரான ஸ்ரீகிருஷ்ண பகவானே எல்லா காலத்திற்குமாக, முடிந்த முடிவாகக் கீதையில் அருளியிருக்கிறார். கீதையைவிட ஒரு சிறந்த உரை வேதங்களுக்கு இதுவரை எழுதப்படவுமில்லை, இனி எழுதவும் முடியாது.
இவ்வளவு மகிமை வாய்ந்த ஸ்ரீமத் பகவத்கீதையைப் பாராயணம் செய்ய இந்த ebook வெளியிடப்படுகிறது. பக்தர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்களாக!