Seivinai Seyapattu Vinai

· Pustaka Digital Media
ई-बुक
200
पेज
रेटिंग और समीक्षाओं की पुष्टि नहीं हुई है  ज़्यादा जानें

इस ई-बुक के बारे में जानकारी

என்னையறியாத ஒரு திருப்தி இதில் பரவியிருப்பதாக உணர்கிறேன். நான் ஆத்ம திருப்திக்காகக் கதை எழுதுபவன். கதை எழுதுவது என்பது என்னை இயங்கச் செய்து, ஆரோக்கியமாய் வைத்திருக்கிறது. தினசரி நான் யோகா பண்ணுவது போல. இத்தொகுதியில் 15 கதைகள் உள்ளன. அதில் 5 முதியோர் மனநிலைத் தவிப்புகளைச் சொல்லும் கதைகள். இன்றைய சமூகச் சூழலில் இது அவசியம் என்று கருதுகிறேன். இன்றைய எழுத்துலகிலும் கூட இவை ஒதுக்கப்படுகின்றன எனலாம். அறிவியல் தொழில் நுட்பம் விஞ்சியிருக்கும் இக்காலகட்டத்தில் நவீனம் என்ற பெயரில் குதூகலமாக மனதைச் சாக்கடையாக்கும் விஷயங்களை என்னால் சொல்ல முடியாது. சமூகச்சிந்தனை உள்ள படைப்புக்களைத்தான் தர முடியும். அது ஆரவாரத்திற்கல்ல. ஆழச் சிந்தித்து நம்மை மேம்படுத்திக் கொள்வதற்கு. என் எழுத்தின் மூலம் என் மனதை நான் புடம் போட்டுக் கொள்கிறேன். படிப்பவர்களுக்கும் இது கிட்டும் என்று நம்புகிறேன். கொஞ்சமேனும் ஒருவரைச் சலனப் படுத்தாத எழுத்தினால் என்ன பயன்? நான் சொல்வது நல்ல வகையில். வண்டியிழுக்கும் கூலித் தொழிலாளி, பழைய பேப்பர்க்காரர், அலுவலக உதவியாளர், லேத்துப் பட்டறை வேலையாள் என்று அடித்தட்டு மக்கள்தான் இத்தொகுதியின், என் கதைகளின் ஆதாரங்கள். இவர்களோடு நடுத்தர வர்க்க வாழ்க்கைச் சிக்கல்களை அனுபவங்களோடு சேர்த்து ஆழ்ந்த ரசனையோடு முன் வைப்பது எனக்குப் பிடித்தமானதாகவும், என்னைத் துடிப்போடு இயங்கச் செய்வதாகவும் இருக்கிறது. விழுமியங்களான மதிப்புமிக்க விஷயங்களுக்கு இடமில்லாமலே போய்விடுமோ என்று அஞ்ச வேண்டியதில்லை. எங்கு சுற்றினாலும், எதில் நுழைந்தாலும், அந்தப் புள்ளியிலிருந்துதான் கிளை பிரிந்தாக வேண்டும். அடிப்படை ஆதார ஸ்ருதி அதுதான். அன்புடன், உஷாதீபன்

लेखक के बारे में

1987 முதல் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப் பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வெளி வந்துள்ளன. இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

உள்ளே வெளியே, பார்வைகள், நேசம், சில நெருடல்கள், தனித்திருப்பவனின் அறை, திரை விலகல், நினைவுத் தடங்கள், வாழ்க்கை ஒரு ஜீவநதி, நான் அதுவல்ல, தவிக்கும் இடைவெளிகள்,வெள்ளை நிறத்தொரு பூனை, செய்வினை-செயப்பாட்டு வினை, முரண் நகை(மின்னூல்), நிலைத்தல், ஆகிய 14 சிறுகதைத் தொகுப்புகளும், புயலுக்குப் பின்னே அமைதி, மழைக்கால மேகங்கள், உஷாதீபன் குறுநாவல்கள், கால் விலங்கு ஆகிய நான்கு குறுநாவல் தொகுப்புகளும், லட்சியப் பறவைகள் என்ற ஒரு சமூக நாவலும், நின்று ஒளிரும் சுடர்கள் என்கிற தமிழ்த் திரைப்படக் குணச்சித்திரங்களின் நடைச் சித்திரம் என்பதான உரைநடைச் சித்திரக் கட்டுரைத் தொகுப்பும், படித்தேன் எழுதுகிறேன், உறங்காக் கடல் என்ற இரு வாசிப்பு இலக்கியம் குறித்த கட்டுரைத் தொகுப்பும் இதுவரை வெளி வந்துள்ளன.

சென்னை இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த மாதச் சிறுகதையாக (1987) இவரது வெள்ளை நிறத்தொரு பூனை மற்றும் 2015 டிசம்பர் மாதச் சிறுகதையாக “கைமாத்து” என்ற சிறுகதையும் பரிசு பெற்றுள்ளன. கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டிப் பரிசு, அமுத சுரபி பொன் விழா சிறுகதைப் போட்டிப் பரிசு, குங்குமம் நட்சத்திரச் சிறுகதை, இளைய தலைமுறைச் சிறுகதைப் பரிசு, தினமணி கதிர் நெய்வேலி புத்தகத் திருவிழாக் குழு நடத்திய சிறுகதைப் போட்டிப் பரிசு ஆகியன இவர் பெற்ற பரிசுகள்.

2007-ம் ஆண்டுக்கான அமரர் ஜீவா – பி.இராமமூர்த்தி நூற்றாண்டு விழா திருப்பூர் தமிழ்ச் சங்கம் மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியன இணைந்து நடத்திய விழாவில் இவரது “வாழ்க்கை ஒரு ஜீவநதி” சிறுகதைத் தொகுப்பு பரிசு பெற்றது. இத்தொகுதி மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நவீன கலை இலக்கியப் பயில் நூலாக அமைந்தது. இவரது சிறுகதைத் தொகுதிகள் பல மாணவர்களால் M.Phil., P.Hd., ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. தினமணி கதிரில் வந்து கொண்டேயிருக்கும் இவரது கதைகள் தொடர்ந்து மாணவ, மாணவிகளால் “கதிர் கதைகள்” என்கிற வரிசையில் ஆய்வு செய்யப்படுகின்றன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் இலக்கியப் போட்டி 2011 ல் இவரது “நினைவுத் தடங்கள்” சிறுகதைத் தொகுதி அந்த ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்பாகப் பரிசு பெற்றது. நெய்வேலி புத்தகக் கண்காட்சி மற்றும் காரைக்குடி புத்தகக் கண்காட்சிக் குழு நடத்திய சிறுகதைப் போட்டிகளில் இவரது சிறுகதைகள் பரிசு பெற்றுள்ளன. கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது 2014 – இவரது “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பிற்குக் கிடைத்தது.

2016 ல் உஷாதீபன் குறுநாவல்கள் – சென்னை நிவேதிதா பதிப்பக வெளியீடாக வெளி வந்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் பதிப்பகமான “காகிதம் பதிப்பகம்” வெளியீடாக இவரது “செய்வினை-செயப்பாட்டுவினை” சிறுகதைத் தொகுதி (2016) வெளிவந்துள்ளதை மனமுவந்து அவர்களோடு கைகோர்த்ததாகப் பெருமையோடு முன் வைக்கிறார். சென்னை கவிதா பப்ளிகேஷனின் வெளியீடுகளாக “லட்சியப் பறவைகள்” என்ற சமூக நாவலும், “நின்று ஒளிரும் சுடர்கள்” என்ற திரைச் சித்திரமும் 2016 க்கான தனது படைப்புக்களின் மற்றும் இரண்டு முக்கிய வெளியீடுகள் என்று தெரிவிக்கிறார். அமேஸான் கி-ண்டிலில் இவரது “முரண் நகை” என்ற சிறுகதைத் தொகுப்பு 2018 வெளியீடு இ.புக்காக வெளிவந்து விற்பனையில் உள்ளது.

குடும்பப் பிரச்னைகளை மையமாக வைத்து சமூக நாவல்களை விவாத நோக்கில், உள்மன வியாபகங்களோடு சுவைபட வழங்குவது இவரது கலை வெளிப்பாடு. சிறுகதைகளில் தனக்கென்று படிந்துபோன சரளமான நடையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் இவரின் தடம் நினைவு கூறத்தக்கது.

इस ई-बुक को रेटिंग दें

हमें अपनी राय बताएं.

पठन जानकारी

स्मार्टफ़ोन और टैबलेट
Android और iPad/iPhone के लिए Google Play किताबें ऐप्लिकेशन इंस्टॉल करें. यह आपके खाते के साथ अपने आप सिंक हो जाता है और आपको कहीं भी ऑनलाइन या ऑफ़लाइन पढ़ने की सुविधा देता है.
लैपटॉप और कंप्यूटर
आप अपने कंप्यूटर के वेब ब्राउज़र का उपयोग करके Google Play पर खरीदी गई ऑडियो किताबें सुन सकते हैं.
eReaders और अन्य डिवाइस
Kobo ई-रीडर जैसी ई-इंक डिवाइसों पर कुछ पढ़ने के लिए, आपको फ़ाइल डाउनलोड करके उसे अपने डिवाइस पर ट्रांसफ़र करना होगा. ई-रीडर पर काम करने वाली फ़ाइलों को ई-रीडर पर ट्रांसफ़र करने के लिए, सहायता केंद्र के निर्देशों का पालन करें.