ஆசிரியரின் பெயர் சுபாஷினி. பாளையில் St. Ignatius Higher Secondary Scool இல் படித்தார். படிக்க விருப்பம் இருந்தும் அவர்கள் குடும்பத்தில் பெரியவளானதும் படிக்க அனுமதிக்காத காரணத்தால் உயர் கல்வி படிக்க முடியாத நிலையில் படிப்பை நிறுத்தினார். இரண்டாவது பையன் பிறந்த பிறகு கண் பார்வை குறையத் தொடங்கியது. அது வரை பத்திரிகை நாவல் என நிறைய வாசிக்கும் பழக்கம் இருந்தது. FM நிகழ்ச்சிகளில் கலந்து தன் கருத்துகளை துணிச்சலாக சொல்லக் கூடியவர். தனக்கான காரியங்களைப் பார்த்துக் கொள்வதோடு வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் தன்னாலான உதவிகளைச் செய்யக் கூடியவர். மிகுந்த தன்னம்பிக்கை உடையவர். கலையாத கனவுகள் இவருடைய முதல் புத்தகம்.