‘ஆனால், மும்பை காவல் துறையோ, உலகப் புகழ் பெற்ற, சி.ஐ.டி. ஜெகனிடம், அந்த வழக்கின் புலன் விசாரணையில், தங்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கின்றது. சி.ஐ.டி. ஜெகன், தனது புலன் விசாரணையைத் துவக்கினார். அதன் பின் என்ன ஆயிற்று?
இவர் தனது எழுத்துலகப் பயணத்தைப் பாற்கடல் என்ற ஒரு மாத இதழின் சிறுகதை மூலம், 01-10-1974 துவக்கி, கடந்த ஐம்பது ஆண்டுகளில், கீழ்க்கண்ட படைப்புகள் மூலம்,வெற்றி நடை போட்டு வருகிறார். வேலூர் [மாலை] முரசு, கோவை முரசு ஆகியவற்றில் 12 பரிசு கதைகள், கோவை வானொலியில் இரு நாடகங்கள், சினிமா எக்ஸ்பிரஸ் இதழில்,' நான் ரசித்த பாடல் படைப்பு, மணிமேகலை பிரசுரம், விசா பப்ளிகேஷன்ஸ் போன்ற ஐந்து பிரசுரங்களுக்காக, 25 நூல்கள், மற்றும் 22 நாடகங்களைத் தானே எழுதி, இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
இந்தியாவில், கணினி அறிமுகமானபோது, அதைப் பற்றிய எட்டு நூல்கள், இண்டர்நெட் அறிமுகம் பற்றிய நூல்[1997], ஆகியவற்றை இவர் எழுதி உள்ளார். இந்தியாவின் முதல் இடத்தில உள்ள ஒரு மின்னணு பதிப்பகத்துக்கு, இரண்டரை ஆண்டுகளில், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம், ஆகிய 4 மொழிகளில் 1038 படைப்புகளை,[சிறு கதைகள், திரில்லர், சரித்திர மற்றும் சமூக நாவல்கள்] இவர் வழங்கி உள்ளார்.
டெண்டுல்கரின் வரலாறு, மற்றும் அமரர் கல்கி அவர்களின், 'பொன்னியின் செல்வன் நாவலின் தொடர்ச்சி நாவல்’, ஆகியவை 14 உலக நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இவர் 150 பாடல்களை இயற்றி, அவற்றிற்கு இசை அமைத்து, பல நிகழ்ச்சிகளில் தானே பாடியும் வருகிறார்.