"சரவணன் கேட்கிறதிலயும் ஒரு நியாயம் இருக்கு அர்ஜீன்... அந்தப் பணம் உன் பொறுப்பில்தான இருந்துச்சு...?"
"பாட்டி...?"
"உன் பொறுப்பில் இருந்த பணம் எப்படிக் காணாமல் போச்சு...?"
"பாட்டி...?"
"களவு போயிருந்தாலும் அதுக்குக் காரணமா உன்னைத்தானே சொல்லுவாங்க...? அப்படியிருந்தும் ஏன் அஜாக்கிரதையாய் இருந்த அர்ஜீன்...?"
"பாட்டி..."
"இதுக்கெல்லாம் பதில் சொல்ற பொறுப்பு உனக்கு இருக்குலே... தெரிஞ்சிருந்தும் ஏன் பணத்தை தொலைச்சே அர்ஜீன்...?"
"பாட்டி..."
அர்ஜீன் திகைத்தானோ இல்லையோ... பாட்டி கேட்ட நான்கு கேள்விகளில் காவ்யா திகைத்து சிலையாக சமைந்தாள்...
எந்த காரணத்திற்காக இந்த கேள்விகளையெல்லாம் அர்ஜீன் கேட்க நேரிட்டது? வாசிப்போம்... எங்கிருந்தோ ஆசைகள் - பாகம் 4.
நான் முத்துலட்சுமி ராகவன். கனவர் ராகவன் லட்சுமி பாலாஜி பதிப்பகம் மற்றும் விஷ்னு பப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகிறார். மகன் பாலசந்தர் மருத்துவராக உள்ளார்.
நான் எழுத ஆரம்பித்தது பத்து வயதில். அண்ணனின் இறப்பு மறக்க முடியாத துக்கமாக மாறிய போது கனவரின் யோசனையை ஏற்று நாவல் எழுத ஆரம்பித்தேன். அப்போது எனக்கு 24 வயது. முதன் முதலில் நிலாவெளியில் என்ற புத்தகத்தை அந்தாதி முறையில் எழுதினேன்.
15 வருட போராட்டத்திற்க்கு பிறகு, 164 தலைப்புகளில் எழுதியுள்ளேன். இதில் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு பாகங்கள் என்று பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 200-வது நாவலை 20 பாகங்களாக எழுத திட்டமிட்டுள்ளேன்.