இந்த நூல் முல்லை நிலத்திற்குரியதான இருத்தல் என்னும் ஒழுக்கத்தைப் பற்றி பாடப்பட்டுள்ளது. யுத்தம் செய்வதற்காகத் தலைவன் சென்று விடுகிறான்.
அவன் திரும்பி வருவதாக சொன்ன கார்காலப் பொழுதும் வந்துவிடுகிறது. அவன் வரவை எதிர் பார்த்து அவன் தாமதிப்பதால் ஏற்படும் துன்பத் திற்காகத் தலைவி ஆற்றியிருப்பதை இந்த செய்யுள் கூறுகிறது.
பத்துப்பாட்டு இலக்கிய வகையில் மிகவும் சிறிய நூல் முல்லைப் பாட்டாகும். இந்த நூலில் மொத்தமே 103 அடிகளே உள்ளது.
அகத்திணை ஒழுக்கம் சார்ந்தது முல்லை. இருப்பினும் அதனுடைய தொடர்பு கொண்ட புற ஒழுக்கமான வஞ்சித்திணையைப் பற்றியும் இந்த நூலில் சில இடங்களில் கூறப்படுகிறது.
முல்லைத் திணை சங்க இலக்கியம் முதல் சங்கம் மருவிய இலக்கியங்களிலும் பாடப்பட்டுள்ளது. இருப்பினும் முல்லைப்பாட்டில் மிகவும் நுட்பமான கருத்துக்கள் காணப்படுகிறது.