Maruthuva Jothidam

· Pustaka Digital Media
4.4
5 ግምገማዎች
ኢ-መጽሐፍ
307
ገጾች
የተሰጡት ደረጃዎች እና ግምገማዎች የተረጋገጡ አይደሉም  የበለጠ ለመረዳት

ስለዚህ ኢ-መጽሐፍ

மருத்துவத்திற்கும் ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்பது பொதுவாக எல்லோர் மனதிலும் எழும் கேள்வி. இந்தக் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் உருவானதே இந்நூல். ஜோதிடம் என்பதும் அறிவியல்தான் என்ற உண்மை தற்பொழுதுதான் மெதுவாக புரியத் தொடங்கியிருக்கிறது. ஜோதிடத்தை அறிவியலாக படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் தற்காலத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அறிவியலையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் பாலம் ஜோதிடம். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் இறுதியில் எல்லாம் இறைவன் செயல் என்று சொல்வதைப் பார்த்திருப்போம். இந்த நூல் ஆன்மிகத்தை வலியுறுத்தும் நூல் அல்ல. அதே நேரத்தில் நமது ஜோதிட சாஸ்திரமும், பழங்கால ஜோதிட வல்லுநர்களும் எந்த அளவிற்கு கிரஹங்களையும், மனித உடற்கூறுஇயலையும் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கின்ற ஒரு முயற்சி. உபநிஷத்துக்கள் அத்தனையும் அறிவியல் உண்மையை விளக்கும் அற்புதமான கண்டுபிடிப்புகளை உள்ளடக்கியவை. ரிஷிகளும் முனிவர்களும் அறிவியல் விஞ்ஞானிகள். குறிப்பாக நம் பாரத தேசத்தில் வானவியல் அறிஞர்கள் பலரும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது வரலாறு உரைக்கும் உண்மை. நம் இந்திய தேசத்தின் பெருமையான வேதத்தின் ஆறு அங்கங்களில் ஒன்று ஜோதிடம். அவற்றைப் பற்றி விரிவாக அறியலாமா...

ደረጃዎች እና ግምገማዎች

4.4
5 ግምገማዎች

ስለደራሲው

30 வருடங்களாக ஜோதிடத்துறையில் தனது பணியினை செய்துவரும் K.B.ஹரிபிரசாத் சர்மா விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பாரம்பரியம் மிக்க ஜோதிடக்குடும்பத்தில் பிறந்தவர். பஞ்சாங்க ஐயர் வீடு என்ற பெயர் பெற்ற பரம்பரையில் பிறந்து தனது குலத்தொழிலோடு கல்லூரிப் படிப்பையும் மேற்கொண்டவர். ஜோதிடம் என்பதை பிறவிஞானமாகப் பெற்றிருந்தாலும் அதனை முறையாகக் கற்க வேண்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் Diploma in Astrology, அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் ஙி.கி., B.A., Astrology படித்து பட்டம் பெற்றார். ஜோதிடம் என்பது அறிவியல் பாடம்தான் என்ற அங்கீகாரத்தை ஹிநிசி அளித்ததும் கோயமுத்தூர் கற்பகம் பல்கலைக்கழகத்தில் M.Sc., Applied Astrology முதுகலைப் பட்டம் பெற்றார். ஜோதிடம் மட்டுமல்லாது, M.A., வரலாறு பட்டமும் பெற்றிருக்கிறார்.

ஜோதிடம் என்பது அடிப்படையில் அறிவியல் சம்பந்தமானதே, ஆன்மிக நம்பிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், ஜோதிடத்தை அறிவியல் ரீதியாக அணுகினால் மனிதன் தனக்கு உண்டாகும் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காண முடியும் என்பது இவரது அசைக்கமுடியாத வாதம். ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை அல்ல, வானில் சுழலும் கிரஹங்களே மனிதனின் வாழ்வியல் நடைமுறையை தீர்மானிக்கின்றன. அதனைப் புரிந்துகொண்டால் எல்லா பிரச்சினைகளையும் எளிதாகக் கடந்து செல்ல முடியும் என்பதே இவர் சொல்லும் தீர்வு.

ለዚህ ኢ-መጽሐፍ ደረጃ ይስጡ

ምን እንደሚያስቡ ይንገሩን።

የንባብ መረጃ

ዘመናዊ ስልኮች እና ጡባዊዎች
የGoogle Play መጽሐፍት መተግበሪያውንAndroid እና iPad/iPhone ያውርዱ። ከእርስዎ መለያ ጋር በራስሰር ይመሳሰላል እና ባሉበት የትም ቦታ በመስመር ላይ እና ከመስመር ውጭ እንዲያነቡ ያስችልዎታል።
ላፕቶፖች እና ኮምፒውተሮች
የኮምፒውተርዎን ድር አሳሽ ተጠቅመው በGoogle Play ላይ የተገዙ ኦዲዮ መጽሐፍትን ማዳመጥ ይችላሉ።
ኢሪደሮች እና ሌሎች መሳሪያዎች
እንደ Kobo ኢ-አንባቢዎች ባሉ ኢ-ቀለም መሣሪያዎች ላይ ለማንበብ ፋይል አውርደው ወደ መሣሪያዎ ማስተላለፍ ይኖርብዎታል። ፋይሎቹን ወደሚደገፉ ኢ-አንባቢዎች ለማስተላለፍ ዝርዝር የእገዛ ማዕከል መመሪያዎቹን ይከተሉ።