‘கடாம்’ என்றால் மதம். அதற்கு ஆகுபெயராக அதனால் பிறந்த ஓசையை இங்கு உணர்த்திற்று. பதிற்றுப்பத்து என்னும் நூலில் பொருளால் சிறப்பு மிக்க தொடர் ஒன்று அந்தப் பாட்டிற்கு பெயராக அமைந்தது.
தமிழ் இயல், இசை, நாடகம் என்று முத்தமிழாக விளங்குகிறது. இயல் தமிழை கவிஞர்களும், இசைத் தமிழை பாணர்களும், நாடகத் தமிழை கூத்தர்களும் வளர்த்து வந்தனர்.
கூத்தர்கள் எட்டு வகை சுவையும் குறிப்புகளும் வெளியில் புலப்படும்படி ஆடுவதில் வல்லவர்கள். தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களும் குறுநில மன்னர்களும் கவிஞர், பாணர், கூத்தர் ஆகியவர் களுக்கு பரிசு கொடுத்து முத்தமிழையும் போற்றி வளர்த்தனர்.