Mai Iruttu

· Pustaka Digital Media
மின்புத்தகம்
194
பக்கங்கள்
ரேட்டிங்குகளும் கருத்துகளும் சரிபார்க்கப்படுவதில்லை மேலும் அறிக

இந்த மின்புத்தகத்தைப் பற்றி

வாழ்க்கை வலியும் வேதனையும் நிறைந்தது. சபிக்கப்பட்டவர்களுக்கு விடியல் நரகமாகத்தான் இருக்கும். தொலைத்தவர்கள் வாழ்க்கையை எங்கே தேடி அலைவார்கள். என்றாவது ஒருநாள் எல்லோரும் அரிதாரத்தைக் கலைக்கத்தானே வேண்டியிருக்கும். நாம் இல்லாத போதும் இங்கே நாடகம் நடந்து கொண்டுதான் இருக்கும். ஜனன வாசல் வழியே நுழைந்தவர்கள் மரணவாசல் வழியே வெளியேறத்தானே வேண்டும். பாவிகளின் கூடாரத்தில் இனிமேல் இறைமகன் இறங்கி வருவாரா. கடவுளின் சட்டம் ஏழைகளுக்கு மட்டும் தானா. வாழ்க்கை சிலருக்கு வரமாகவும் பலருக்கு சாபமாகவும் ஆகிவிடுகிறதல்லவா? கடவுளை நோக்கி காலடி எடுத்து வைத்தவர்களின் கதி என்னவாயிற்று தெரியுமா? தேடிக் கண்டுகொண்டவர்கள் இங்கு யாராவது இருக்கிறார்களா? வாழ்க்கைப் புதிருக்கு விடைகாண இன்னும் எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கும்? கடவுளைத் தேடுபவர்கள் சாத்தானின் சதுரங்க ஆட்டம்தான் இந்த உலகம் என்று புரிந்து கொள்ள வேண்டும்!

ஆசிரியர் குறிப்பு

திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி எனும் நகரத்தைச் சேர்ந்தவர் ப.மதியழகன்.நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமா பெற்றவர்.கீற்று, வார்ப்பு, திண்ணை, உயிரோசை, பதிவுகள், மலைகள் ஆகிய இணைய இதழ்களிலும், நவீன விருட்சம், அம்ருதா, தாமரை,இனிய உதயம் ஆகிய இலக்கிய இதழ்களிலும், குங்குமம் போன்ற வெகுஜன இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளது.

முதல் கவிதை தொகுப்பு ‘தொலைந்து போன நிழலைத் தேடி’ 2008ல் வெளிவந்தது.இரண்டாவது கவிதை தொகுப்பு ‘சதுரங்கம்’ 2011ல் வெளிவந்தது.மூன்றாவது கவிதை தொகுப்பு ‘புள்ளிகள் நிறைந்த வானம்’ 2017ல் வெளிவந்தது. நான்காவது கவிதைகளும், கட்டுரைகளும் சேர்ந்த தொகுப்பாக துயர்மிகு வரிகள் எனும் தலைப்பில் 2017ல் வெளிவந்தது. இணைய இதழ்களில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளது.

தற்போது மன்னார்குடியில் தனியார் கணினி பயிற்சி மையத்தில் கணினி பயிற்றுனராக வேலை செய்து வருகிறார்.

இந்த மின்புத்தகத்தை மதிப்பிடுங்கள்

உங்கள் கருத்தைப் பகிரவும்.

படிப்பது குறித்த தகவல்

ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் டேப்லெட்கள்
Android மற்றும் iPad/iPhoneக்கான Google Play புக்ஸ் ஆப்ஸை நிறுவும். இது தானாகவே உங்கள் கணக்குடன் ஒத்திசைக்கும் மற்றும் எங்கிருந்தாலும் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் படிக்க அனுமதிக்கும்.
லேப்டாப்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள்
Google Playயில் வாங்கிய ஆடியோ புத்தகங்களை உங்கள் கம்ப்யூட்டரின் வலை உலாவியில் கேட்கலாம்.
மின்வாசிப்பு சாதனங்கள் மற்றும் பிற சாதனங்கள்
Kobo இ-ரீடர்கள் போன்ற இ-இங்க் சாதனங்களில் படிக்க, ஃபைலைப் பதிவிறக்கி உங்கள் சாதனத்திற்கு மாற்றவும். ஆதரிக்கப்படும் இ-ரீடர்களுக்கு ஃபைல்களை மாற்ற, உதவி மையத்தின் விரிவான வழிமுறைகளைப் பின்பற்றவும்.