Kuttram Purinthavan

· Pustaka Digital Media
ኢ-መጽሐፍ
155
ገጾች
የተሰጡት ደረጃዎች እና ግምገማዎች የተረጋገጡ አይደሉም  የበለጠ ለመረዳት

ስለዚህ ኢ-መጽሐፍ

தாயைப் பிரிந்து இருக்க இயலாமை, தந்தையின் தியாகங்கள், இளமை தந்த திமிரில் இனம் புரியாமல் எழுந்த தீஞ்செயல்கள், அதனால் மனமுடைந்த பெற்றோர், நட்பில் விழுந்த கீறல், எதில் நிறைவு கொள்ளுதல் என்பதில் மனம் சார்ந்து எழும் கேள்விகள், ஒன்றை, ஒருவரை நேசித்தல் என்பது மனதளவில அழிவில்லாதது எனும் தன்மை, நெருக்கமானவை, உயிரானவை அந்நியப்பட்டுப் போகுதல், எளிய மனிதனின் அன்றாடப் பாடுகள், வயது முதிர்ந்தும், மனம் முதிராமையின் விளைவுகள், மனசு எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நினைத்துத் தவிக்கும், அலைபாயும் இயல்புடைமை என்று வெவ்வேறு திசைகளில் இதமாயும், பதமாயும் பயணிக்கிறது இத்தொகுப்பு.

ስለደራሲው

1987 முதல் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப் பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வெளி வந்துள்ளன. இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். உள்ளே வெளியே, பார்வைகள், நேசம், சில நெருடல்கள், தனித்திருப்பவனின் அறை, திரை விலகல், நினைவுத் தடங்கள், வாழ்க்கை ஒரு ஜீவநதி, நான் அதுவல்ல, தவிக்கும் இடைவெளிகள்,வெள்ளை நிறத்தொரு பூனை, செய்வினை-செயப்பாட்டு வினை, நிலைத்தல், முழு மனிதன், பின்னோக்கி எழும் அதிர்வுகள், சில யதார்த்தங்கள் வனம் புகுதல், தனித்த பறவையின் சலனங்கள் ஆகிய 18 சிறுகதைத் தொகுப்புகளும், புயலுக்குப் பின்னே அமைதி, மழைக்கால மேகங்கள், உஷாதீபன் குறுநாவல்கள், கால்விலங்கு, துருவங்கள், எதிர்காற்று ஆகிய ஆறு குறுநாவல் தொகுப்புகளும், லட்சியப் பறவைகள் என்ற சமூக நாவலும், நின்று ஒளிரும் சுடர்கள்,காலத்தால் அழியாக் கலைஞர்கள் என்கிற தமிழ்த் திரைப்படக் குணச்சித்திரங்களின் நடைச் சித்திரம்,மற்றும் நகைச்சுவைக் கலைஞர்கள் பற்றிய உரைநடைச் சித்திரக் கட்டுரைத் தொகுப்பும், உறங்காக் கடல், படித்தேன்எழுதுகிறேன், பொங்குமாங்கடல் ஆகிய மூன்று இலக்கியக் கட்டுரைத் தொகுப்பும், இவை போக 30 மின் நூல்களும், புஸ்தகா.கோ.இன்-ல் நாவல்களும், சிறுகதைகளும் ஆக இருபது நூல்களும் இதுவரை வெளி வந்துள்ளன.

சென்னை இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த மாதச் சிறுகதையாக (1987) இவரது வெள்ளை நிறத்தொரு பூனை மற்றும் 2015 டிசம்பர் மாதச் சிறுகதையாக “கைமாத்து” என்ற சிறுகதையும் பரிசு பெற்றுள்ளன. கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டிப் பரிசு, அமுத சுரபி பொன் விழா சிறுகதைப் போட்டிப் பரிசு, குங்குமம் நட்சத்திரச் சிறுகதை, இளைய தலைமுறைச் சிறுகதைப் பரிசு, தினமணி கதிர் நெய்வேலி புத்தகத் திருவிழாக் குழு நடத்திய சிறுகதைப் போட்டிப் பரிசு ஆகியன இவர் பெற்ற பரிசுகள்.

2007-ம் ஆண்டுக்கான அமரர் ஜீவா – பி.இராமமூர்த்தி நூற்றாண்டு விழா திருப்பூர் தமிழ்ச் சங்கம் மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியன இணைந்து நடத்திய விழாவில் இவரது “வாழ்க்கை ஒரு ஜீவநதி” சிறுகதைத் தொகுப்பு பரிசு பெற்றது. இத்தொகுதி மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நவீன கலை இலக்கியப் பயில் நூலாக அமைந்தது. இவரது சிறுகதைத் தொகுதிகள் பல கல்லூரிகளில் மாணவர்களால் M.Phil., P.Hd., ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி கதிரில் வந்து கொண்டேயிருக்கும் இவரது கதைகள் “கதிர் கதைகள்” என்கிற வரிசையில் ஆய்வு செய்யப்படுகின்றன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் இலக்கியப் போட்டி 2011 ல் இவரது “நினைவுத் தடங்கள்” சிறுகதைத் தொகுதி அந்த ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்பாகப் பரிசு பெற்றது. நெய்வேலி புத்தகக் கண்காட்சி மற்றும் காரைக்குடி புத்தகக் கண்காட்சிக் குழு நடத்திய சிறுகதைப் போட்டிகளில் இவரது சிறுகதைகள் பரிசு பெற்றுள்ளன. கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது 2014 – இவரது “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பிற்குக் கிடைத்தது.

இவரது எழுத்துப்பணி வார மாத இணைய இதழ்களில் இன்றும் விடாது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ለዚህ ኢ-መጽሐፍ ደረጃ ይስጡ

ምን እንደሚያስቡ ይንገሩን።

የንባብ መረጃ

ዘመናዊ ስልኮች እና ጡባዊዎች
የGoogle Play መጽሐፍት መተግበሪያውንAndroid እና iPad/iPhone ያውርዱ። ከእርስዎ መለያ ጋር በራስሰር ይመሳሰላል እና ባሉበት የትም ቦታ በመስመር ላይ እና ከመስመር ውጭ እንዲያነቡ ያስችልዎታል።
ላፕቶፖች እና ኮምፒውተሮች
የኮምፒውተርዎን ድር አሳሽ ተጠቅመው በGoogle Play ላይ የተገዙ ኦዲዮ መጽሐፍትን ማዳመጥ ይችላሉ።
ኢሪደሮች እና ሌሎች መሳሪያዎች
እንደ Kobo ኢ-አንባቢዎች ባሉ ኢ-ቀለም መሣሪያዎች ላይ ለማንበብ ፋይል አውርደው ወደ መሣሪያዎ ማስተላለፍ ይኖርብዎታል። ፋይሎቹን ወደሚደገፉ ኢ-አንባቢዎች ለማስተላለፍ ዝርዝር የእገዛ ማዕከል መመሪያዎቹን ይከተሉ።