Koluse... Koluse...

· Pustaka Digital Media
電子書籍
301
ページ
評価とレビューは確認済みではありません 詳細

この電子書籍について

இந்நூல் தினமணி, தினமலர் மற்றும் இலக்கியப் பீடம், உரத்த சிந்தனை ஆகிய இதழ்களின் பரிசு பெற்ற கதைகளுடன் இன்னபிற இதழ்களில் பிரசுரமாகியுள்ள கதைகள் அடங்கியதொரு பல்சுவைத் தொகுப்பு.

சமுதாய நிகழ்வுகள், காணும் காட்சிகள், நேரில் சம்பவங்களைப் பார்த்து ரசித்த உணர்வுகள்... இவையனைத்தும் மின்னல் ஒளிக்கீற்றாய் என்னுள் இறங்கி மனதில் ஏற்படுத்திய தாக்கமே கதையின் கருவாக மலர்ந்துள்ளது.

ஆங்காங்கே நடக்கும் ஜாதிமத, பேதங்கள், இனக் கலவரங்கள், அரசியல் சதுராட்டம், மதுவால் சீரழியும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை, நமது பண்பாடு கலாச்சாரம் பற்றிய சரியானப் புரிதலின்றி கடைபிடித்து வரும் மூடநம்பிக்கையால் மடிந்து போகும் மனித நேயம்... இவைகளை நேரில் சந்திக்கும்போது எனக்குள் ஏற்படும் கோபம், சீற்றம்... இவைகளை எனக்குள்ளே தணித்துக் கொள்ளும் வடிகாலாய் உருவான சில கதைகள்...

இருபது வருடங்களுக்கும் மேலாக பார்வைத்திறனற்றவர்கள், மற்ற மாற்றுத் திறனாளிகளின் தன்னார்வலராக அவர்களுடனான நேரிடைத் தொடர்பால் அவர்கள் சந்திக்கும் வாழ்க்கைப் பிரச்சனைகளைக் காட்டும் கதைகள்... தேசத்தின் மீது கொண்ட அதீதமான நாட்டமும் இராணுவ வீரர்கள் குறித்த தேடலாலும் உருவான கதைகள்...

இவைகளைப் படிக்கும் வாசகர்கள் மனதில் சமுதாய உணர்வின் அதிர்வலை கடுகளவாவது ஏற்படுமாயின், அதுவே இந்நூலின் வெற்றி.

著者について

பெயர். : ஸரோஜா சகாதேவன். B.Sc ( புவியியல்)
கணவர்: P.V.சகாதேவன். ME, FIE (late)
பிறந்த ஊர்: சேலம்

தனது 53வது வயதிலிருந்து தினமணி, தினமலர், வணிக இதழ்கள், சிற்றிதழ்கள் ஆகியவற்றில் கதை, கட்டுரைகளை எழுதி வருகிறார். தினமலர் சிறுகதைப் போட்டியில் இரண்டு முறையும் தினமணியிலும் மற்றும் பல இதழ்களிலும் பரிசுகள் பெற்றுள்ளார். இவையன்றி கல்லூரி கருத்தரங்கு கோவை, மழலைச் சுவடுகளில் பாடல்கள், 'டி.வி.ஆர் பரிசு பெற்ற கதைகள் - தொகுப்பு' ஆகியவற்றில் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. இதுவரை இந்நூலுடன் ஆறு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவரது ' பாடாது பறந்த கிளி' சமூக நாவல் சிறந்த பெண்ணிய நாவலுக்காக இரண்டு பரிசுகளையும், ' முட்டையின் பலமும் போராளிச் சிறுவனும்' சிறுவர்களுக்கான வரலாற்று நாவல் உரத்த சிந்தனையின் N.R.K விருதும், 'இந்தியா பாகிஸ்தான் போரும் விளைவும்' நூலுக்காக உரத்த சிந்தனையின் 'எழுத்துச் சுடர்' விருது, மற்றும் N.R.K விருதும், திருப்பூர் தமிழ் கலை, இலக்கிய அறக்கட்டளையின் 'வாழ்நாள் சாதனையாளர்' விருதும் பெற்றுள்ளார்.

பொழுது காக்கும் பணி: இருபது வருடங்களுக்கும் மேலாக பார்வைத் திறனற்றவர்களின் கல்விப் பணியில் தன்னார்வலராக உதவி வருகிறார். வாசிப்பாளராக , ஆய்வு கட்டுரைகள் எழுதுவதில் உதவி, தமிழ் இலக்கியங்கள், குறிப்பாக கம்ப இராமாயணம் முழுதும் பள்ளத்தூர் பழனியப்பன் உரையுடன் ( 6000 பக்கங்கள்), TNPSC, UGC தேர்வுகளுக்கான புத்தகங்களை வாசித்து ஒலிப்பதிவு செய்து வழங்கல், போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்தல் என்று கல்விப் பணியாற்றி வருகிறார்.

விருதுகள்: சென்னை மாநிலக் கல்லூரியின் 'ஒலிப்பதிவுச் செம்மல்' விருது, உரத்த சிந்தனையின்'கண்ணொளிக் காவலர்' விருது, ஈரோடு Volunteers of humanity India வின் 'பாரதி கண்ட புதுமைப் பெண்' விருது ஆகியவை இவரது தன்னார்வத் தொண்டுக்கு கிடைத்துள்ள அங்கீகாரங்கள்.

この電子書籍を評価する

ご感想をお聞かせください。

読書情報

スマートフォンとタブレット
AndroidiPad / iPhone 用の Google Play ブックス アプリをインストールしてください。このアプリがアカウントと自動的に同期するため、どこでもオンラインやオフラインで読むことができます。
ノートパソコンとデスクトップ パソコン
Google Play で購入したオーディブックは、パソコンのウェブブラウザで再生できます。
電子書籍リーダーなどのデバイス
Kobo 電子書籍リーダーなどの E Ink デバイスで読むには、ファイルをダウンロードしてデバイスに転送する必要があります。サポートされている電子書籍リーダーにファイルを転送する方法について詳しくは、ヘルプセンターをご覧ください。