சிறு வயது முதலே குடும்பப் பொறுப்புகளை சுமக்கத் துவங்கும் ஸ்டீபன். தன் தங்கைகளின் திருமணத்துக்காகவும், வீட்டின் நலனுக்காகவும் படிப்பை முடித்தவுடனேயே வெளிநாட்டுக்குச் சென்று உழைக்கத் துவங்குகிறான். அவனுக்கென எந்த ஒரு ஆசையையோ, விருப்பத்தையோ வைத்துக் கொள்ளாதவன்.
அவனுக்கு வழிகாட்டியாகவும், உற்ற துணையாகவும் இருக்கும் மிக்கேல் மாமாவின் பெண்ணான ஸ்டெல்லாவை விரும்புகிறான். ஆனால், மகனை தங்கள் நல்வாழ்வுக்கென மட்டுமே பயன்படுத்தும் தாய், அவனது ஒரே விருப்பத்தை மதிக்காமல் போனால்? விரும்பிச் சுமக்கும் சுமையே ஸ்டீபனுக்கு சுமையானால்?
வெளிநாட்டு வாழ்க்கையும், தனிமையும் அவனை என்ன செய்யும்? காத்திருக்கச் சொன்ன காதலி அவனுக்கென காலங்கள் கடந்தும் காத்திருந்தாளா? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையறிய தொடர்ந்து படியுங்கள்.