Endrum Irupean

· Pustaka Digital Media
மின்புத்தகம்
86
பக்கங்கள்
ரேட்டிங்குகளும் கருத்துகளும் சரிபார்க்கப்படுவதில்லை மேலும் அறிக

இந்த மின்புத்தகத்தைப் பற்றி

கற்பனைக் கவியரங்குகள், நாடக மேடையில் நடப்பதாக விரியும் இந்த நாடகத்தில் கற்பனை மாந்தர், கவிஞர்களாக உலா வருகிறார்கள். தங்கள் உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அவரவர் கதைகளையும் கூறுகிறார்கள். தங்களுக்கு தெரிந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். வாசித்து மகிழ்வோம்.

ஆசிரியர் குறிப்பு

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். மதுரகவி (1962), எண்பதுகளிலிருந்து தமிழில் புதுக்கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், தகவல் துளிகள், துணுக்குகள், நாடகங்கள் எழுதி வருகிறார். 1984 முதல் 2000 வரை சென்னையில் விளம்பர ஏஜென்சிகளில் மேலாளராகப் பணிபுரிந்தார். 2000 முதல் சென்னையில் விளம்பரத் துறை தமிழ் எழுத்தாளராக/மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வருகிறார். எழுத்தின் மீது உள்ள ஆர்வத்தால் தொடர்ந்து படைப்புகளை எழுதி வருகிறார்.

எண்பதுகளில்/தொண்ணூறுகளில் இவருடைய படைப்புகள், சுமங்கலி, குங்குமம், குங்குமச் சிமிழ், அமுத சுரபி, பாக்கெட் நாவல், குடும்ப நாவல், முல்லைச்சரம் ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. இளைஞனாக இருந்த தருணத்தில் புதுச்சேரி அகில இந்திய வானொலியில் இரு முறை நேயராக நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். 2010 முதல் வளர்தொழில் வணிக இதழில் இவருடைய விளம்பரவியல்/வர்த்தகவியல் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தமிழ் கம்ப்யூட்டர் இதழில் இவருடைய தகவல் தொழில்நுட்பம் பற்றிய கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன/வெளியிடப்பட்டு வருகின்றன.

2010 ஆம் ஆண்டு, கலைமகள் இலக்கிய இதழ் கி.வா.ஜ அவர்கள் நினைவுச் சிறுகதைப் போட்டியில், காதம்பரி என்ற இவருடைய சிறுகதை முதல் பரிசு பெற்றது. 2000-ன் தொடக்கத்தில் இயங்கிய தமிழா தமிழா.காம் இணைய இதழில் இவர் எழுதிய தமிழ் இலக்கியக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. 2003-ல் இயங்கிய சென்னை.காம் இணைய இதழிலும் படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 2021-ஆம் ஆண்டு, நம் உரத்த சிந்தனை மாத இதழில் இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. செப்டம்பர் 22-லிருந்து Porulatharam Sukumar என்னும் யூட்யூப் வலைதளத்தில் இவருடைய படைப்பான தேதி சொல்லும் சேதி என்ற நாள் பற்றிய தினசரி நிகழ்ச்சி பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த மின்புத்தகத்தை மதிப்பிடுங்கள்

உங்கள் கருத்தைப் பகிரவும்.

படிப்பது குறித்த தகவல்

ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் டேப்லெட்கள்
Android மற்றும் iPad/iPhoneக்கான Google Play புக்ஸ் ஆப்ஸை நிறுவும். இது தானாகவே உங்கள் கணக்குடன் ஒத்திசைக்கும் மற்றும் எங்கிருந்தாலும் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் படிக்க அனுமதிக்கும்.
லேப்டாப்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள்
Google Playயில் வாங்கிய ஆடியோ புத்தகங்களை உங்கள் கம்ப்யூட்டரின் வலை உலாவியில் கேட்கலாம்.
மின்வாசிப்பு சாதனங்கள் மற்றும் பிற சாதனங்கள்
Kobo இ-ரீடர்கள் போன்ற இ-இங்க் சாதனங்களில் படிக்க, ஃபைலைப் பதிவிறக்கி உங்கள் சாதனத்திற்கு மாற்றவும். ஆதரிக்கப்படும் இ-ரீடர்களுக்கு ஃபைல்களை மாற்ற, உதவி மையத்தின் விரிவான வழிமுறைகளைப் பின்பற்றவும்.