வான்புகழ் கொண்ட வள்ளுவன் குறளுக்கு அணி செய்தோர் பலர். இத்தகைய வாழ்வியல் திருக்குறளுக்கு இனிய உரை தரப்படவேண்டுமென்ற என்னுள் விளைந்த விளைவே இவ்வினிய உரை.
முனைவர் மூ. இராசாராம் இஆப அவர்கள் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் (MA) ஆம் ஆய்வு சட்டம் (BL) மற்றும் ஆய்வு நிறைஞராக முனைவர் பட்டம் (PhD) பெற்றுள்ளார்.
இவர் 36 ஆண்டுகளுக்கு தமிழக அரசில் பல்வேறு பொறுப்புகளில் மேலாக மக்கள் சேவை ஆற்றியுள்ளார். இவர் மனித நேயப் பண்பு மிக்கவர். இன்முகத்துடன் பொதுமக்களின் தேவைகள் அறிந்து சேவை செய்பவர். இவரது சேவை அவருக்குப் பல விருதுகளைப் பெற்றுத் தந்தது. தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது இவர் ஆற்றிய சிறப்பான சேவையைப் பாராட்டி தமிழ்நாடு அரசு இவருக்குச் சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவர் விருதினை வழங்கிச் சிறப்பித்தது.
இவர் ஆராய்ச்சி அறிஞர்; 70க்கும் மேற்பட்ட நூல்களையும் 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை களையும் எழுதியுள்ளார். இவரது ஆங்கில நூல்கள் குறிப்பாக திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்வெளிநாட்டு நூலகங்கள் பலவற்றிலும் குறிப்பாக அமெரிக்க வாஷிங்டன் வெள்ளை மாளிகை நூலகத்திலும் இடம் பெற்றுள்ளன.