வேறு சிலர் 500 அடிகளைக் கொண்டு பாட்டு பெரிய அளவில் இருப்பதால் இதற்கு பெரும் பாணாற்றுப்படை என்று பெயர் வந்ததாகவும் கூறுவர்
இந்த நூல் தொண்டைமான் இளந்திரையான் பற்றி சிறப்பித்து கடியலூர் உருத்திரக்கண்ணனார் பாடிய நூலாகும்.
இந்த மன்னன் வெண்வேற்கிள்ளி என்ற சோழ மன்னனுக்கும் நாகக் கண்ணிகைக்கும் பிறந்தவன் என்று மணிமேகலை கூறுகிறது.
தொண்டைமான் இளந்திரையனிடம் சென்று பரிசு பெற்று வரக் கூடிய ஒரு பாணன் வறுமையில் வாடும் இன்னொரு பாணனிடம் தொண்டை மானிடம் சென்று தன்னுடைய துன்பத்தை ஆற்றுமாறு சொல்வதாக இந்த நூல் அமைந்துள்ளது.
மேலும், இவனுடைய நாட்டில் திருட்டு தொழில் செய்யும் கள்வர்கள் இல்லை. வானத்தில் முழங்கும் இடி கூட மற்றவர்களை துன்புறுத்துவதில்லை. இந்த நூலில் சிறப்பான உவமைகள் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.