சமூக அவலங்களும், வாழ்வியல் மேம்பாட்டிற்கான வழி முறைகள் உணர்ந்தும், சூழ்நிலைகள் காரணமாக சொல்ல முடியாமலும், செயல்படுத்தப்பட முடியாமலும் இருக்கின்ற பரிதாப நிலைகள் தான் திறக்க முடியாத பூட்டுக்களாய் சாவிகளைத் தேடிக் கொண்டே இருக்கின்றன.சொல்ல வந்ததன் ஒரு பகுதிதான் இந்த புத்தகத்தில் கவிதைகளாக வெளிவந்திருக்கிறது. வாசகர்களின் ஊக்கமான ஆதரவுகள் தரும் வரவேற்பின் துணை கொண்டு அடுத்தடுத்த பதிப்புகள் வெளியிடப்படும்.
கருத்துகளை உள் வாங்கிப் படித்து விமர்சிக்கும் மேலான வாசகர்களே படைப்பெனும் படகை வெற்றிகரமாகக் கரை சேர்ப்பவர்கள் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டு உங்கள் முன் இந்த புத்தகம் சமர்ப்பிக்கப்படுகிறது.
அனுராதா சௌரிராஜனாகிய நான் தனியார் வங்கியில் பணிபுரிந்து, ஓய்வு பெற்று,தமிழின் மேல் உள்ள காதலாலும், சமூகப் பொறுப்புணர்வுகளாலும் உந்தப் பட்டு எழுதுவதை என் முழு நேர விருப்பமாக்கிக் கொண்டேன். தற்சமயம் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன்! என் எழுத்துக்களை உள்வாங்கி வாசிப்பவரின் மேலான விமர்சனங்களே என்றும் என் பேனாவின் தீராத மை.