Google ஆதரவுச் சேவைகள் (GSS) பயன்பாட்டின் மூலம் Google வாடிக்கையாளர் ஆதரவு ஏஜென்ட்டுடன் உங்கள் Android சாதனத் திரையைப் பகிர்ந்து, தனிப்பயனாக்கிய ஆதரவு அனுபவத்தைப் பெறுங்கள். உங்கள் சாதனத்தில் உள்ள GSSஐப் பயன்படுத்தி, ஏஜென்ட்டால் திரையைப் பகிர்வதற்கு உங்களை அழைக்க முடியும். அத்துடன் சிக்கலை விரைவாகவும் எளிதாகவும் தீர்க்க, திரையில் காட்டப்படும் விரிவுரைகளை விளக்கிக்கூறி உங்களுக்கு உதவ முடியும். திரையைப் பகிரும் போது, உங்கள் சாதனத்தை ஏஜென்ட்டால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அவரது வழிமுறைகளை விளக்குவதற்கு உதவும் வகையில், உங்கள் திரை அவருக்குக் காட்டப்படும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் திரையைப் பகிர்வதை நிறுத்தலாம் அல்லது இடைநிறுத்தலாம்.
இந்தப் பயன்பாடானது Android 7.1.1 அல்லது அதற்குப் பின்னர் வந்த பதிப்புகளில் இயங்கும் Pixel, Nexus சாதனங்களில் முன்பே நிறுவப்பட்டு வருகிறது. Android 5.0 அல்லது அதற்குப் பின்னர் வந்த பதிப்புகளில் இயங்கும் பெரும்பாலான சாதனங்களில் இதை நிறுவலாம். இந்தப் பயன்பாடு தானாகத் தொடங்காது, மேலும் திரையைப் பகிரும்படி Google வாடிக்கையாளர் ஆதரவு ஏஜென்ட், பயனருக்கு அழைப்பு அனுப்பினால் மட்டுமே அது பயன்படுத்தப்படும்.
புதுப்பிக்கப்பட்டது:
31 அக்., 2022