கணக்கில் உள்நுழையும்போது இரண்டாவது படிச் சரிபார்ப்பைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் ஆன்லைன் கணக்குகளுக்குக் கூடுதல் பாதுகாப்பை Google Authenticator வழங்குகிறது. அதாவது கணக்கில் உள்நுழையும்போது கடவுச்சொல்லுடன் உங்கள் மொபைலில் உள்ள Google Authenticator ஆப்ஸ் மூலம் உருவாக்கப்படும் குறியீட்டையும் நீங்கள் டைப் செய்ய வேண்டும். நெட்வொர்க் அல்லது செல்லுலார் இணைப்பு இல்லாதபோதும் உங்கள் மொபைலில் உள்ள Google Authenticator ஆப்ஸால் சரிபார்ப்புக் குறியீட்டை உருவாக்க முடியும்.
* உங்கள் Google கணக்கிலும் அனைத்து சாதனங்களுடனும் Authenticator குறியீடுகளை ஒத்திசைக்கலாம். இதன்மூலம், உங்கள் மொபைலை இழந்துவிட்டாலும்கூட அவற்றை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் அணுகலாம்.
* QR குறியீடு மூலம் Authenticator கணக்குகளைத் தானாகவே அமைக்கலாம். இது விரைவானது, எளிமையானது. மேலும் குறியீடுகள் சரியாக அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும் உதவும்.
* பல கணக்குகளைப் பயன்படுத்தும் வசதி. பல கணக்குகளை நிர்வகிக்க Authenticator ஆப்ஸைப் பயன்படுத்தலாம். இதனால், கணக்குகளில் உள்நுழையத் தேவைப்படும் ஒவ்வொரு முறையும் ஆப்ஸிற்கிடையே மாற வேண்டியதில்லை.
* நேரம், எண்ணிக்கை அடிப்படையிலான குறியீட்டை உருவாக்கும் வசதி. உங்கள் தேவைகளுக்குப் பொருந்தும் குறியீட்டு உருவாக்க வகையைத் தேர்வுசெய்யலாம்.
* QR குறியீடு மூலம் சாதனங்களுக்கிடையே கணக்குகளை மாற்றலாம். புதிய சாதனத்திற்கு உங்கள் கணக்குகளை மாற்ற மிகவும் வசதியான வழி இது.
* Google Authenticatorரைப் பயன்படுத்த உங்கள் Google கணக்கில் இருபடிச் சரிபார்ப்பை இயக்க வேண்டும். தொடங்க, http://www.google.com/2step என்ற இணைப்பைப் பார்க்கவும் அனுமதிக்கான அறிவிப்பு: கேமரா: QR குறியீடுகளைப் பயன்படுத்தி, கணக்குகளைச் சேர்ப்பதற்குத் தேவை
புதுப்பிக்கப்பட்டது:
29 ஜன., 2025