AccuWeather என்ற பெயர் எளிதாக எடுக்கப்படவில்லை. மிகத் துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளை அளிக்கும் திறனை உருவாக்கிய அதே வேளையில், எங்கள் முக்கிய தயாரிப்பான துல்லியமான வானிலையைப் பிரதிபலிக்கும் வகையில் “AccuWeather” பிராண்டையும் உருவாக்கினோம். ஒரு நிறுவனமாக, வானிலைத் தகவல்களை வழங்கும் உலகின் சிறந்த மற்றும் மிகவும் துல்லியமான ஆதாரம் என்ற எங்கள் புகழைத் தக்கவைக்க ஒவ்வொரு நாளும் கடினமான பணியாற்றுகிறோம்.
ஒவ்வொரு நாளும், 1.5 பில்லியன் மக்கள் தங்களின் வாழ்க்கையைத் திட்டமிடவும், தங்கள் வணிகத்தைப் பாதுகாக்கவும் மற்றும் பல அன்றாட செயல்பாடுகளிலும் உதவிட AccuWeather தகவல்களை நம்பியுள்ளனர். மற்ற எந்த அரசு அல்லது தனியார் வானிலை ஆதாரங்களை காட்டிலும் அதிக இடங்களில், உலகம் முழுவதும் Superior Accuracy™ உடன் 100-க்கும் மேற்பட்ட மொழிகள் மற்றும் வட்டார மொழிகளில் தனித்துவமான முன்னறிவிப்பை AccuWeather வழங்குகிறது.
துல்லியமான தெரு முகவரி அல்லது GPS தகவலுடன் அடுத்த இரண்டு மணிநேரங்களுக்கு ஒவ்வொரு நிமிடத்திற்கும் மழைபொழிவு முன்னறிவிப்பை அளிக்கும் AccuWeather MinuteCast® போன்ற பிரத்யேக மற்றும் உரிமையுடைய அம்சங்களுடன் மிகச் சமீபத்திய வானிலைச் செய்திகளையும் தகவல்களையும் AccuWeather வழங்குகிறது. இந்த அம்சமானது அடுத்த 120 நிமிடத்திற்கு மழைப்பொழிவு வகை, அளவு போன்ற சுருக்கமான விவரங்களுடன், உங்கள் பகுதியில் மழை தொடங்கும் மற்றும் நிற்கும் நேரத்தின் தகவல்களையும் அளிக்கிறது. MinuteCast® ஆனது அமெரிக்கா, கனடா, ஸ்வீடன், டென்மார்க், ஐக்கிய ராஜ்யம், அயர்லாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, பெல்ஜியம், அன்டோரா, நார்வே, பின்லாந்து, எஸ்டோனியா, சுவிச்சர்லாந்து, நெதர்லாந்து, லக்சம்பர்க், ஜிப்ரால்டர், லிச்சன்ஸ்டைன் ஆகிய நாடுகள் முழுவதும் கிடைப்பதுடன், விரைவில் பிற நாடுகளிலும் வரவிருக்கிறது.
அன்றாடச் செயல்களைத் திட்டமிடுவதற்கு உதவும் வகையில் AccuWeather இன் வானிலைத் தகவல்களைப் பெற்று வானிலை முன்னறிவிப்புகளை அறிந்திடுங்கள். உள்ளடக்கத்தில் அடங்கியுள்ளவை:
• நடப்பு வானிலைத் தகவல்கள்
• சுருக்கமான மற்றும் விரிவான வானிலை முன்னறிவிப்பு
• உள்ளூர் / குறுகிய கால முன்கணிப்பு முன்னறிவிப்புகள்
• அனிமேஷன் ரேடார் மற்றும் செயற்கைக்கோள் படங்கள்
• வீடியோக்கள்
• மேலும் பல
*இருப்பிடத்திற்கு ஏற்றவாறு உள்ளடக்கம் மாறுபடும்.
இன்றே AccuWeather பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து, உங்கள் Android மொபைல், டேப்லெட், TV மற்றும் Wear OS ஆகியவற்றில் வானிலை முன்னறிவிப்பில் விருது பெற்ற சிறந்த துல்லியத்தை அனுபவிக்கவும். தினசரி முன்னறிவிப்பை விட, சிறந்த வானிலை பயன்பாட்டை முயற்சிக்கவும் மற்றும் உங்கள் முன்னறிவிப்பிலிருந்து பலவற்றைப் பெறவும்.
புதுப்பிக்கப்பட்டது:
17 மார்., 2025